தேடுதல்

சீன கிறிஸ்தவர்கள் சீன கிறிஸ்தவர்கள்   (ANSA)

ஒரே வாரத்தில் வத்திகானின் அனுமதியுடன் சீனாவில் 2வது புதிய ஆயர்!

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Yiduxian அப்போஸ்தலிக்க மறைமாநிலத்தை தடைசெய்த பிறகு , ஏப்ரல் 20, 2023 அன்று Weifang புதிய மறைமாவட்டத்தை நிறுவினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மத்திய சீனாவில் அண்மையில் நிறுவப்பட்ட Weifang மறைமாவட்டத்திற்கு ஒரு புதிய கத்தோலிக்க ஆயர் நியமிக்கப்பட்டார் என்றும், இது வத்திக்கான் மற்றும் கம்யூனிஸ்ட் சீன அரசால் அங்கீகரிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம்.

53 வயது நிரம்பிய அருள்தந்தை Anthony Sun Venjun அவர்கள், Shandong மாநிலத்திலுள்ள Weifang ஆயராக ஜனவரி 29, இத்திங்களன்று, திருநிலைப்படுத்தப்பட்டதாக வத்திக்கான் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்ததாகவும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

Henan மாநிலத்திலுள்ள Zhengzhou-வின் புதிய ஆயராக அருள்தந்தை Taddeus Wang Yuesheng அவர்கள் திருநிலைப்படுத்தப்பட்டதை, ஜனவரி 25, வியாழனன்று வத்திக்கான் அறிவித்ததை அடுத்து இந்தச் செய்தி வந்துள்ளது அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட சீன கத்தோலிக்க முதுபெரும் தந்தையர்கள் அமைப்பின் முன்னாள் தலைவரான Linyi-யின் ஆயர் John Fang Xingyao அவர்கள் இந்த ஆயர் திருநிலைபாட்டுத் திருப்பலிக்குத் தலைமை தாங்கினார் என்றும், 44 அருள்பணியாளர்கள், மற்றும் 330 அருள்சகோதரிகள் மற்றும் பொதுநிலையினருடன் மற்ற நான்கு ஆயர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர் என்றும், வத்திக்கானின் Fides செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது என்றும் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம்.

புதிய ஆயர் Anthony Sun Venjun அவர்கள் 2008-ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் பணிபுரிந்து வருகிறார். 1970-ஆண் ஆண்டு பிறந்த இவர், 1989 முதல் 1994 வரை ஷாங்காயில் உள்ள ஷெஷன் குருமடத்தில் தனது குருத்துவப் பயிற்சியை முடித்ததார். 1995-ஆம் ஆண்டு பெய்ஜிங் மறைமாவட்ட பேராலயத்தில் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

Weifang-லுள்ள கத்தோலிக்கர்கள் பிரெஞ்சு பிரான்சிஸ்கன் குருக்களின் மறைப்பணி தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர், ஆனால் 2008-ஆம் ஆண்டு முதல் இவர்கள் ஆயர் இல்லாமல் இருந்தனர் என்பது மிகவும் குறிப்பிடத் தக்கது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 January 2024, 13:49