தேடுதல்

குழந்தை இயேசு குழந்தை இயேசு  (ANSA)

தடம் தந்த தகைமை – ஏன் தேடினீர்கள்?

சமூக அவலங்களைக் கண்ணுற்றுக் கேள்விகளை எழுப்புவதும், நன்மைக்காக நம்மை வேள்வியாக்குவதும் கடவுளின் பணிகளே. எதையும் ஏன்? எனக் கேட்கும் எழுச்சி மனம் வேண்டும்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக் கொண்டிருந்தோமே”. இது ஒரு தாயின் கேள்வி.

நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில்

ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? இது ஒரு மகனின் பதிலுடன் கூடிய கேள்வி.

ஆழ்ந்த அர்ப்பணம் எதார்த்தமான கேள்விகளை எழுப்பும். அந்தக் கேள்விகள் சமூக இருப்பு நிலையைத் தகர்க்கின்ற வலிமைமிக்கதாயிருக்கும்.

தன்னிடம் மங்கல மொழி சொன்ன கபிரியேல் தூதரிடம் நாசரேத் மரியா “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” (லூக் 1:34) என எழுப்பிய கேள்விகள் கர்வத்திலிருந்து கமழ்ந்து வந்தவையல்ல. அவரது ஏழ்மை, இளமை பதட்டத்திலிருந்து புறப்பட்டவை; அவை அர்த்தங்கள் செறிந்திருந்தவை. அவ்வாறுதான் விவிலியத்தில் இயேசுவின் முதல்

சொல் ஒரு கேள்வியோடு தொடங்குகின்றது.

எருசலேம் ஆலயம் கலை கொஞ்சும் எழில்கூடம். பிரமாண்டமும் பிரமிப்பும் நிறைந்து வழிந்தன. ஆனால் அதன் அழகைப் பார்த்து இரசித்து மெய்மறந்தவர் போன்று இயேசு இங்கே சொல்லப்படவில்லை.

ஆலயத்திற்குள் வரையறுக்கப்பட்ட இடப்பிரிவுகள், காணிக்கைப் பெட்டிகள், அவற்றின் நோக்கங்கள், குருக்களிடமிருந்து சான்றிதழ் பெற்று காணிக்கை செலுத்தும் முறை, அதிக விலையிலான காணிக்கைகள், நாணய மாற்றலில் முறைகேடுகள் போன்ற பல பாகுபாடுகள் பதின்பருவத்திலிருந்த இயேசுவின் சிந்தனையைச் சீண்டின. இவற்றினைத்தான் மறைநூல் அறிஞர்களிடம் கேள்விகளாகத் தொடுத்திருப்பார். அதுவே

அன்று அவருக்குத் தந்தையின் அலுவல் ஆனது.

சமூக அவலங்களைக் கண்ணுற்றுக் கேள்விகளை எழுப்புவதும், நன்மைக்காக நம்மை வேள்வியாக்குவதும் கடவுளின் பணிகளே.

இறைவா! எதையும் ஏன்? எனக் கேட்கும் எழுச்சி மனம் தாரும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 January 2024, 12:47