தேடுதல்

கர்தினால் மால்கம் இரஞ்சித் கர்தினால் மால்கம் இரஞ்சித்   (ANSA)

கிறிஸ்துமஸ் பெருவிழா பகிர்வின் அடையாளமாக அமையட்டும்!

முடிந்தவரை இக்கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவில் அலங்காரங்கள், பரிசுகள் மற்றும் பிற பொருட்களுக்கான தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும் : கர்தினால் மால்கம் இரஞ்சித்

செல்வராஜ் சூசைமாணிக்கம் வத்திக்கான்

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் இலட்சக்கணக்கானவர்கள் உணவின்றி வாடும் வேளையில், இந்தக் கிறிஸ்துமஸ் பெருவிழாவில்,  பசியால் வாடும் ஏழைகளுடன் உணவை பகிர்ந்து கொள்ளுமாறு கிறிஸ்தவர்களை  வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார் அதன் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித்

தலைநகர் கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில், டிசம்பர் 19, இச்செவ்வாயன்று, செய்தியாளர்களிடம் பேசிய கர்தினால் இரஞ்சித், இத்தீவு நாட்டின் நிலைமை பேராபத்தில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

அதிக எண்ணிக்கையிலான குடும்பங்களுக்கு சரியான வாழ்வாதாரம் இல்லை என்று கூறிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதாந்திர செலவுகளுக்கு 120,000 இலங்கை ரூபாய் (அமெரிக்க டாலர் 371) தேவைப்படுகிறது என்றும், ஆனால் ஒரு குடும்பத்தின் சராசரி மாத வருமானம் 241 அமெரிக்க டாலர்கள் மட்டுமே என்று கூறும் அண்மைய ஆய்வையும் அச்செய்தியாளர் சந்திப்பின்போது  எடுத்துக்காட்டினார் கர்தினால் இரஞ்சித்.

மேலும் இந்தப் பணத்தைக் கொண்டு, குழந்தைகளின் பள்ளிப்படிப்பையோ, உணவையோ பெற முடியாது, அல்லது மின்சாரம், தண்ணீர், சமையல் எரிவாயு மற்றும் பிற பொருள்களுக்குப் பணம் செலுத்த முடியாது என்றும் மக்களின் நிலை குறித்த தனது ஆழ்ந்த கவலைய வெளிப்படுத்தினார் கர்தினால் இரஞ்சித்.

இந்நாட்டிலுள்ள 2 கோடியே 22 இலட்ச மொத்த மக்களில், பெருமபான்மையானவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும் இவர்களில் 7 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்கள் என்றும் சுட்டிக்காட்டிய கர்தினால் இரஞ்சித் அவர்கள்,  இந்நாட்டின் வரலாற்றில் இவர்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர் என்றும் எடுத்துக்காட்டினார்.

இந்நிலையில் கத்தோலிக்கர்கள், மற்ற அனைத்து கிறிஸ்தவர்கள் மற்றும் நல்லெண்ணம் கொண்ட பிற மக்கள் யாவரும், இந்த ஆண்டு கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவில் தங்களிடம் இருப்பதை, அவர்களைச் சுற்றியுள்ள ஏழை எளிய மக்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுனார் கர்தினால் இரஞ்சித். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 December 2023, 14:26