தேடுதல்

Lac Ste Anne-இல் திருத்தந்தை இறைவேண்டல் Lac Ste Anne-இல் திருத்தந்தை இறைவேண்டல்  

கனடாவில் சிறப்பிக்கப்பட்ட தேசிய இறைவேண்டல் தினம்!

டிசம்பர் 12-ஆம் தேதி, குவாதலூப்பே அன்னை மரியா திருவிழா சிறப்பிக்கப்படும் வேளை, இத்தேசிய இறைவேண்டல் தினம் கனடா தலத் திருஅவையால் கொண்டாடப்பட்டு வருகிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பூர்வீக இனமக்களுடன் தங்களின் உடனிருப்பை வெளிக்காட்டும் விதமாக, தேசிய இறைவேண்டல் தினத்தை கொண்டாடும் கனடா ஆயர்கள், ஜூலை 2022- ஆம் ஆண்டில் அந்நாட்டின் பூர்வீக இன மக்களிடையே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆறு நாள் மேற்கொண்ட தவத்திருப்பயணத்தை நினைவுகூருமாறும் விசுவாசிகளைக் கேட்டுகொண்டனர்.

பூர்வீக இன மக்களுடன் ஒன்றிப்பை வெளிப்படுத்தும் விதமாக, இத்தேசிய இறைவேண்டல் தினம், தேசிய கனடா கத்தோலிக்கப் பூர்வீக அமைப்பால்  2002-ஆம் ஆண்டுமுதல் ஒருங்கிணைக்கப்பட்டு, அந்நாடு முழுவதும் உள்ள மறைமாவட்டங்களால் கொண்டாடப்படுகிறது. குவாதலூப்பே அன்னை மரியா திருவிழாவான டிசம்பர் 12-வை மனதிகொண்டும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

கனடாவின் மிகவும் பிரபலமான கத்தோலிக்க திருப்பயணங்களில் ஒன்றான Lac Ste Anne-வுக்குத் திருத்தந்தை பயணம் செய்தார். இது, Nakota Sioux-ஆல், கடவுளின் ஏரி எனவும், Cree மக்களால் 'Lac Ste Anne எனவும் அழைக்கப்பட்டது. பின்னர் இது நிரந்தர கத்தோலிக்கப் பணியை நிறுவிய மறைப்பணியாளரும் முதல் அருள்பணியாளருமான Jean-Baptiste Thibault அவர்களால் இது Lac Ste Anne என்று பெயரிடப்பட்டது. 1842-இல், இவ்விடம் ஏற்கனவே தலைமுறைகளாகப் புனிதமானதாகக் கருதப்பட்டதுடன் பழங்குடியினருக்கு நலமளிக்கும் இடமாக அறியப்பட்டது.

கிறிஸ்தவ மறைக்கு மனம் திரும்பிய மெக்சிகோ நாட்டு ஹுவான் தியேகோ என்பவருக்கு 1531ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி காட்சியளித்த குவாதலூப்பே அன்னை மரியா, தான் தோன்றிய தெபேயாக் குன்றின்மீது தனக்கென ஓர் ஆலயம் எழுப்புமாறு ஆயரை விண்ணப்பிக்குமாறுக் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 December 2023, 15:24