தேடுதல்

பௌத்த-கிறிஸ்துவக் கலந்துரையாடல் பௌத்த-கிறிஸ்துவக் கலந்துரையாடல்   (Vatican Media)

ஏழாவது பௌத்த-கிறிஸ்துவக் கலந்துரையாடல் பாங்காக்கில் துவங்கியது

காயமடைந்த மனிதகுலத்தையும் பூமியையும் குணப்படுத்துவதற்கான உரையாடலில் கருணையும் அகாபேயும் என்ற கருத்தில், ஏழாவது பௌத்த-கிறிஸ்துவக் கருத்தரங்கம் தாய்லாந்தின் பாங்காக்கில் தொடங்கியுள்ளது.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

நவம்பர் 13-16 வரை தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள மஹாசூலாலோங்கோர்ன்ராஜவித்யாலயா பல்கலைக்கழகத்தில், ஏழாவது பௌத்த-கிறிஸ்துவக் கருத்தரங்கு, காயமடைந்த மனிதகுலத்தையும் பூமியையும் குணப்படுத்துவதற்கான உரையாடலில் கருணையும் அகாபேயும் என்ற தலைப்பில் நடைபெறுவதாக, பல்சமய உரையாடலுக்கான திருப்பீட துறை திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் அறிவித்துள்ளது.

பல்சமய உரையாடலுக்கான திருப்பீட துறை, தாய்லாந்தின் கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு மற்றும் மஹாசூலாலோங்கோர்ன்ராஜவித்யாலயா புத்த பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியே இந்நிகழ்வாகும்.

தாய்லாந்து மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள பௌத்தர்களுடன் உரையாடல் மூலம் கட்டியெழுப்பப்பட்ட நட்பு, ஓருவர் மற்றவரை புரிதலை மீண்டும் உறுதிப்படுத்தல், மற்றும் மனிதகுலத்தின் காயங்களைக் குணப்படுத்துவதற்கான பொதுவான செயல்களை அடையாளம் காணுதல் போன்றவைகளுக்கான முயற்சி இது என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கில், கம்போடியா, ஹாங்காங், இந்தியா, ஜப்பான், மலேசியா, மங்கோலியா, மியான்மர், சிங்கப்பூர், இலங்கை, தென் கொரியா, தாய்லாந்து, தைவான், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பங்கேற்பதாகவும்,  தொடக்க அமர்வில் தாய்லாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பிற மதங்களின் பிரதிநிதிகளின் நல்வாழ்த்துக்கள் மற்றும் மரம் நடும் விழா ஆகியவை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 November 2023, 15:11