தேடுதல்

காசாவில் குண்டு வீச்சு காசாவில் குண்டு வீச்சு   (AFP or licensors)

காசாவில் அமைதி திரும்பட்டும்!

காசாவில் நிகழும் போரை நிறுத்தி மனிதாபிமான உதவிகள் கிடைக்க உதவுங்கள் : அருள்பணியாளர் Gabriel அவர்கள்,

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அனைவருக்குமே அச்சுறுத்தல் இல்லாத எளிமையான மனிதர்களால் காசா  நிரம்பியுள்ளது என்றும் கூறியுள்ளார் அதன் திருக்குடும்ப பங்குத்தளத்தின் பங்குத்தந்தை அருள்தந்தை Gabriel Romanelli.

அக்டோபர் 24, செவ்வாயன்று பதிவு செய்யப்பட்ட அவரது வேண்டுகோளில், கடந்த வாரம் தாக்கப்பட்ட கிரேக்க ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டுத் தலத்திலிருந்து தனது பங்குத்தளம் ஏறக்குறைய 400 மீட்டர் தொலைவில் உள்ளது என்று தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் Gabriel.

பாதிக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் எங்கள் உறவினர்கள், நண்பர்கள், நாங்கள் அக்கறை கொண்டவர்கள், நாங்கள் அன்புகூர்ந்தவர்கள் என்று கூறியுள்ள அருள்பணியாளர் Gabriel அவர்கள், படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் தனது பங்குத்தளத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் Gabriel.

இப்போது, ​​​​எங்கள் பங்குத்தளத்தில் ஏற்கனவே தஞ்சமடைந்திருந்த புலம்பெயர்ந்தோருடன் சேர்ந்து, அன்னை தெரசாவின் பிறரன்பு சபையின்  குழந்தைகள் உட்பட ஏறத்தாழ  700 பேர் உள்ளனர்" என்றும், நிலைமை தற்போது மிகவும் ஆபத்தாக உள்ளது, காரணம் குண்டுவெடிப்புகள் இரவும் பகலும் நிகழ்ந்து வருகின்றன என்றும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் அருள்பணியாளர் Gabriel

காசா பகுதி முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,100 பேரைத் தாண்டியுள்ளது என்றும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ள அருள்பணியாளர் Gabriel அவர்கள், இந்தப் போரை நிறுத்தி மனிதாபிமான உதவிகள் கிடைக்க உதவுங்கள் என்று விண்ணப்பிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2023, 14:46