தேடுதல்

இந்தியக் குழந்தைகள் இந்தியக் குழந்தைகள்   (For exclusive buying details contact nikhilgangavane@gmail.com)

இந்தியாவில் அதிகரித்துவரும் பசி!

உலகளாவிய பசி குறியீட்டில் (GHI) 125 நாடுகளில் இந்தியா 111 வது இடத்தைப் பிடித்துள்ளது, இது கடந்த ஆண்டை விட நான்கு இடங்கள் சரிந்துள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

2023-ஆம் ஆண்டின் உலகளாவிய பசி குறியீட்டில் (GHI) 28.7 மதிப்பெண்களுடன், இந்தியாவில் பசியின் அளவு தீவிரமாக உள்ளது என்று அயர்லாந்து மற்றும் ஜெர்மனியை தளமாகக் கொண்ட NGO-களான Concern Worldwide மற்றும் Welt Hunger Hilfe வெளியிட்டுள்ள உலகளாவிய அறிக்கை கூறியுள்ளதாக ஆசியா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

GHI வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில் பாகிஸ்தான் 102-வது இடத்திலும், வங்காளதேசம் 81-வது இடத்திலும், நேபாளம் 69-வது இடத்திலும், இலங்கை 60-வது இடத்திலும் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளதுடன், கடந்த சில ஆண்டுகளாக, தெற்காசியா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்கா ஆகியவை அதிக பட்டினியை சந்திக்கும் பகுதிகளாக உருவெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் தங்களின் உயரத்திற்கேற்ற உடலமைப்பைப் பெறுவதில் இந்தியா 18.7 விழுக்காடு பெற்று கடைசி இடத்தில் உள்ளது; அதாவது 18 வயதுக்குட்பட்ட இந்தியர்களில் ஒருவர் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவராக உள்ளனர் என்று அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

அதேவேளையில், இந்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இக்குறியீட்டை அது நிராகரித்துள்ளதுடன், இது "பசியின்" குறைபாடுள்ள அளவீடாகத் தொடர்கிறது என்றும், இந்தியாவின் உண்மையான நிலையை இவ்வறிக்கை பிரதிபலிக்கவில்லை" என்றும் கூறியுள்ளது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, உலகளாவிய பசி குறியீட்டின் மூத்த கொள்கை ஆலோசகரான Miriam Wiemers அவர்கள், ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான கணக்கீடுகள் அதன் கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் அல்ல, மாறாக இந்தியாவின் சொந்த உணவு இருப்புநிலைக் குறிப்பிலிருந்து தரவை அடிப்படையாகக் கொண்டவை என்று கூறியுள்ளார். (ASIAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 October 2023, 14:26