தேடுதல்

சிரியா நாட்டு சிறார் சிரியா நாட்டு சிறார்  (AFP or licensors)

சிரியாவில் குடும்பங்களுக்கு நிதியுதவியை அதிகரிக்கும் ACN

சிரியாவில் பெப்ருவரி மாதம் நில அதிர்ச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்று முதன் முதலில் நிவாரண உதவிகளை வழங்கியது கத்தோலிக்க ACN அமைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பெப்ருவரி மாதம் சிரியாவில் இடம்பெற்ற பெரும் பூமி அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதில் தொடர்ந்து உதவிகளை வழங்கிவருகிறது கத்தோலிக்க பிறரன்பு இயக்கமான Aid to the Church in Need அமைப்பு.  

பள்ளிகளை, கோவில்களை, துறவு இல்லங்களை, பாலர் காப்பகங்களை, இளையோர் மையங்களை சீர்செய்வதற்கான நிதியுதவியை வழங்க முன்வந்துள்ள ACN  என்ற Aid to the Church in Need அமைப்பு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவியை அதிகரிக்கவும் உறுதி வழங்கியுள்ளது.  

திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளை ஏற்று நடத்தும் ACN அமைப்பு, தற்போது இரண்டாம் கட்டமாக 4 இலட்சத்து 60 ஆயிரம் டாலர்களை நிவாரண உதவிகளுக்கு என சிரியாவுக்கு வழங்குவதாக அக்டோபர் 2ஆம் தேதி திங்களன்று அறிவித்தது.

12 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரை சந்தித்துவந்த சிரியாவில் பெப்ருவரி மாதம் இடம்பெற்ற நில அதிர்ச்சியால் பெருமளவில் பாதிக்கப்பட்ட அலெப்போ நகருக்கு, ACN அமைப்பு வழங்கும் நிதியுதவிகளுள் 60 விழுக்காடு செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ருவரி மாதம் நில அதிர்ச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்று முதன் முதலில் நிவாரண உதவிகளை வழங்கியது கத்தோலிக்க ACN அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கி மற்றும் சிரியாவில் பெப்ருவரி மாதத் துவக்கத்தில் இடம்பெற்ற நில அதிர்ச்சியால் 59,000 பேர் உயிரிழந்தனர்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 October 2023, 13:48