ஜரன்வாலா கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
பாதிக்கப்பட்ட 464 குடும்பங்கள் மீண்டும் தங்கள் வாழ்க்கையை வாழ உதவும் வகையில் நிவாரணத் திட்டத்திற்கு நிதியளிப்பதில் தொண்டு நிறுவனம் மகிழ்ச்சி அடைகின்றது என்றும், தேவைப்பட்டால், ஜரன்வாலாவில் முழுமையாக எரிந்த வீடுகள் மற்றும் ஆலயக் கட்டிடங்களை புதுப்பிப்பதற்கான எதிர்கால ஆதரவை பரிசீலிக்க தயாராக இருக்கின்றோம் என்றும் கூறியுள்ளார் ACN இன் திட்ட இயக்குனர் மார்கோ மென்காக்லியா.
ACN எனப்படும் தேவையில் இருக்கும் பன்னாட்டுத் தலத்திருஅவையினருக்கு உதவும் அமைப்பானது அண்மையில் வெளியிட்ட தகவல்களின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானின் ஜரன்வால் பகுதியில் ஏற்பட்டக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை உதவிப்பொருள்களை வழங்கி உதவி வருகின்றது.
"பெரும் துன்பங்களுக்கு மத்தியில் உயிர்வாழ போராடும் இந்த மக்களின் உயிர்கள் பெரும் ஆபத்தில் உள்ளன" என்று ACN செய்திகளுக்குக் கூறியுள்ள பைசலாபாத் மறைமாவட்ட ஆயர் இந்திரியாஸ் ரெஹ்மத் அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவவும்படிக் கேட்டுகொண்டதன் பெயரில் இந்த அவசரகால நிவாரணம் வழங்கப்படுகின்றது.
ஆகஸ்ட் 16 அன்று தந்தையும் அவரது மகனும் குர்ஆனை அவமதித்ததாக கூறப்பட்ட வதந்திகளால் ஏற்பட்ட கலவரத்தை கிறிஸ்தவர்களின், வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் உடைமைகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து புலம்பெயர்ந்துள்ளனர்.
இதில் மிகவும் பாதிக்கப்பட்ட 464 குடும்பங்களை மறைமாவட்டம் கண்டறிந்து, அவர்களுக்கு முதலில் உடனடி உதவிகளையும், பின்னர் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப தேவையான பொருட்களையும் உதவிகளையும் வழங்குவதற்கான திட்டத்தை வகுத்துள்ளது.
குடும்பங்களுக்குத் தேவையான பொருட்களில் அடிப்படைத் தேவைகளான உடைகள், சமையலறைப் பொருள்கள், படுக்கை மற்றும் மெத்தைகள், பள்ளி மாணவர்களுக்கான பொருட்கள், ரிக்ஷாக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை அடங்கும்.
ஜரன்வாலா கலவரத்தில் பாதிக்கப்பட்ட 464 குடும்பங்களுக்கான உடனடி நிவாரணப் பொருட்கள், வீடுகள் மறுசீரமைப்பு, வாகனங்கள் வாங்குதல் ஆகியவற்றை அவசரகால நிவாரணமாக வழங்கி வருகின்றது தேவையில் இருக்கும் பன்னாட்டுத் தலத்திருஅவையினருக்கு உதவும் அமைப்பு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்