தேடுதல்

புனித வியாகுல அன்னை புனித வியாகுல அன்னை  (Tutti i diritti sono riservati)

நேர்காணல் – தூய வியாகுல அன்னை திருவிழா

எல்லாத் துன்பங்களும் வியாகுலங்கள் அல்ல. நமது தவறுகளால் வரும் துன்பங்களும், குறையுள்ள மனிதர்களாகிய நாம் ஒருவரோடொருவர் பழகும்போது ஏற்படும் மன வேதனைகளும் வியாகுலங்கள் ஆகாது.
புனித வியாகுல அன்னை திருவிழா செய்தி - அருள்சகோதரி டெக்லா மேரி ம.ஊ.ச.

மெரினா ராஜ் – வத்திக்கான்

14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித பிரிஜித்தம்மாளுக்கு அன்னை மரியா காட்சியளித்து  தான் அனுபவித்த துன்பங்களை வியாகுலங்களை அவருக்கு வெளிப்படுத்தினார். அக்காட்சியில் அன்னை மரியா, தன்னுடைய வியாகுலங்களை மறந்து அதற்கான ஆறுதல் மொழி கூறாமல் மறந்து வாழும் மனித குலத்தை நினைத்து வருந்தி அவரோடு பேசினார். அன்னையின் வியாகுலம் துன்பமல்ல. துன்பம் வெற்றி என்னும் வியாகுலங்களை தன்னகத்தேக் கொண்ட பேரரசி நம் தாய் மரியா. நம்மை ஆண்டு வழி நடத்தும் உரிமையையும் அதிகாரத்தையும் பெற்றவர்.

எல்லாத் துன்பங்களும் வியாகுலங்கள் அல்ல. நமது தவறுகளால் வரும் துன்பங்களும், குறையுள்ள மனிதர்களாகிய நாம் ஒருவரோடொருவர் பழகும்போது ஏற்படும் மன வேதனைகளும் வியாகுலங்கள் ஆகாது. மாறாக தன்னல தளைகளிலிருந்து விடுபடும்போது, பிறர் நல்வாழ்வு பெற உழைக்கும் போது, இறைவன் தனக்கு கொடுத்த அழைத்தல், பணி இதுதான் என ஒன்றை உய்த்துணர்ந்து பற்றுறுதியுடன் வாழ்ந்து செயல்படும் போது ஏற்படும் துன்ப துயரங்களே, வியாகுலங்கள் ஆகும். இத்தகைய பெருமைமிகுந்த வியாகுல அன்னையின் திருவிழா பற்றியக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்பவர் புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை தலைமை அன்னை அருள்சகோதரி முனைவர் டெக்லா மேரி.

வரலாற்றுப்பேராசியரான அருள்சகோதரி முனைவர் டெக்லா மேரி அவர்கள், “முத்துக்குளித்துறையில் போர்த்துக்கீசியர்கள்“ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியில் 30ம் ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியதுடன் அக்கல்லூரியிலேயே 4 ஆண்டுகள் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருள்சகோதரிகளின் மாநிலத்தலைவராக சிறப்பாக செயலாற்றிய அருள்சகோதரி அவர்கள், சிறகடிக்கவேண்டிய வயதில் சிறைவாசிகளாக வாழும் சிறாருக்கான சிறைப்பணியினையும் திறம்பட ஆற்றியவர். தற்போது புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபையின் தலைமைஅன்னையாக பணியாற்றிக்கொண்டிருக்கும் சிறப்பு பெற்ற அருள்சகோதரி முனைவர் டெக்லா மேரி அவர்களை புனித வியாகுல அன்னையின் திருவிழா குறித்த செய்திகளை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன்அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2023, 16:04