தேடுதல்

புனித அன்னை தெரசா கல்லறை கல்தத்தா புனித அன்னை தெரசா கல்லறை கல்தத்தா  (ANSA)

சிவகங்கையில் புனித அன்னை தெரசாவிற்கு புதிய ஆலயம்

சிவகங்கை மறைமாவட்டத்தில் உள்ள வல்லனி பகுதியில் 4.5 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது புனித அன்னை தெரசா ஆலயம்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

தமிழகத்தின் சிவகங்கை மறைமாவட்டத்தில் முதன்முறையாக புனித அன்னை தெரசாவிற்கு கட்டப்பட்டுள்ள புதிய ஆலயம் மதுரை உயர் மறைமாவட்டப் பேராயர் முனைவர். அந்தோணி பாப்புசாமி அவர்களால் புனிதப்படுத்தப்பட உள்ளது.

செப்டம்பர் 28 செவ்வாய்க்கிழமை இந்திய இலங்கை நேரம் மாலை 5.30 மணியளவில் திறக்கப்பட உள்ள இவ்வாலயமானது சிவகங்கை மறைமாவட்டத்தில் உள்ள வல்லனி பகுதியில் 4.5 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.

சிவகங்கை பேராலயத்தின் ஒரு பகுதியான வல்லனியில் 2016 ஆம் ஆண்டு ஜூன் 29 அன்று, அப்போதைய சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு சூசை மாணிக்கம் அவர்களால் புனித அன்னை தெரசாவை பாதுகாவலியாகக் கொண்டு, மறைமாவட்ட உதவியுடன் தற்காலிக ஆலயம் ஒன்றுக் கட்டப்பட்டு, தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.

இப்பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. தாமஸ் பரிபாலன் அவர்கள் பொறுப்பேற்றார். 27.05.2018 அன்று முதல், பங்குத்தந்தையாக அருள்பணி. S. லூர்து ராஜ் அவர்கள் பொறுப்பேற்று பணியாற்றி வருகின்றார்.

தற்காலிக ஆலயத்தில் வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், பங்குத்தந்தை அருள்பணி. S. லூர்துராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் புதிய ஆலயம் கட்ட திட்டமிடப்பட்டு, முன்னாள் முதன்மை குரு பேரருட்திரு. ஜோசப் லூர்துராஜா மற்றும் மும்மதத் தலைவர்கள் இணைந்து புதிய ஆலயத்திற்கு 15.09.2019 அன்று அடிக்கல் நாட்டினர்.

கோவிட் பெருந்தொற்றினால் ஏற்பட்ட ஊரடங்கால் பணிகள் சற்று தொய்வுற்று, தற்போது பணிகள் நிறைவுபெற்ற நிலையில், செப்டம்பர் 28 வியாழன் மாலை புதிய ஆலயமானது அர்ச்சிக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2023, 12:44