தேடுதல்

கிறிஸ்தவ ஒன்றிப்பு கிறிஸ்தவ ஒன்றிப்பு  

பதினைந்தாவது ஆசிய கிறிஸ்தவ மாநாடு ஆரம்பம்

ஆசிய கிறிஸ்தவ மாநாடு 21 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்கு சாட்சியாக படைப்போடு புதிய உறவை வாழ்வது எப்படி என்ற அடிப்படையில் இம்மாநாடானது நடைபெற உள்ளது.

திமினா செலின் ராஜேந்திரன் - வத்திக்கான்

பதினைந்தாவது ஆசிய கிறிஸ்தவ மாநாடு (CCA) இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயத்தில் 27 செப்டம்பர் முதல் அக்டோபர் 4 வரை நடைபெற்றவுள்ளது என்றும், அறுநூறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்க உள்ளனர் என்றும் திருப்பீடத்தகவல் தொடர்பக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானில் இருந்து ஆஸ்திரேலியா வரை உள்ள 99 தலத்திருஅவைகள் மற்றும் 17 தேசிய தலத்திருஅவை பேரவைகளை ஒன்றிணைக்கும் CCA எனப்படும் ஆசிய கிறிஸ்தவ மாநாடு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட உள்ளது என்றும், ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு கோட்டயத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட இம்மா நாடானது கோவிட் பெருந்தொற்றினால் ஒத்திவைக்கப்பட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயற்கையுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை வரையறுப்பது, மதங்களுக்கிடையேயான உறவுகளையும் CCA ஒவ்வொரு மட்டத்திலும் ஒன்றோடொன்று இணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் மனித மேலாதிக்கத்தின் யோசனையை நீக்குவதை ஆதரிக்கும் கிறிஸ்தவ நோக்கத்தையும் இம்மாநாடு எடுத்துக்காட்டுகிறது.

உலகை ஆபத்தில் ஆழ்த்தும் பொருளாதார தர்க்கங்களில் இருந்து தப்பிக்கவும், அனைத்து மனிதர்களுடனும் பகிர்ந்து வாழவும்,  ஒரு பொதுவான பொறுப்பை அங்கீகரிப்பதற்கான பாதையை கிறிஸ்தவ ஒன்றிப்பு வெளிப்படுத்துகின்றது.

1957 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பிரபாத்தில் நிறுவப்பட்ட ஆசியாவின் கிறிஸ்தவ மாநாடு, ஆசியாவில் உள்ள கிறிஸ்தவர்களின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்காகவும் ஆன்மீக பாரம்பரியத்தை தொடர்ந்து பகிர்ந்துகொள்வதற்கும் ஆழப்படுத்துவதற்கும் திறன் கொண்ட படைப்போடு உறவுக்கான வழியைக் குறிக்கிறது.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் கிறிஸ்தவர்களின் தினசரி அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தி, உரையாடல் மற்றும் மதங்களுக்கிடையேயான ஒத்துழைப்புக்கான புதிய இடங்களை ஆராயவும் இம்மா நாடு உதவுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2023, 15:38