தேடுதல்

உரோம் யூத கோவிலில் திருத்தந்தை (2016 ஜனவரி 17) உரோம் யூத கோவிலில் திருத்தந்தை (2016 ஜனவரி 17) 

நாத்ஸி வதைப்போர் காலத்தில் யூதர்களுக்கு கத்தோலிக்க உதவி

கத்தோலிக்க ஆண் மற்றும் பெண் துறவு மடங்களில் நாத்ஸி படைகளிலிருந்து பாதுகாப்பு வழங்கப்பட்ட 4,300 பேர் குறித்த விவரங்கள் தற்போதுதான் முதன் முறையாக வெளியிடப்பட்டுள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உரோம் நகரை நாத்ஸி துருப்புக்கள் ஆக்கிரமித்திருந்த காலத்தில் பல ஆயிரக்கணக்கான யூதர்களுக்கு கத்தோலிக்க துறவு மடங்கள் புகலிடம் கொடுத்தது குறித்த புதியத் தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

கத்தோலிக்க ஆண் மற்றும் பெண் துறவு மடங்களில் நாத்ஸி படைகளிலிருந்து பாதுகாப்பு வழங்கப்பட்ட 4,300 பேர் குறித்த விவரங்கள் தற்போதுதான் முதன் முறையாக வெளியிடப்பட்டுள்ளன.

இயேசுசபையினர் உரோம் நகரில் நடத்தி வரும் பாப்பிறை விவிலிய நிறுவனமான Biblicum காப்பாற்றி வைத்திருக்கும் ஆவணங்களிலிருந்து இந்த உண்மை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

கத்தோலிக்க துறவு மடங்கள் மற்றும் நிறுவனங்களால் நாத்ஸி வதைப்போர் காலத்தில் பல ஆயிரக்கணக்கான யூதர்கள் ஒளித்துவைக்கப்பட்டு காப்பாற்றப்பட்டது குறித்து ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது, யூதர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக் குறித்து இயேசு சபை அருள்பணியாளர் Gozzolino Birolo அவர்கள் சேகரித்த ஆவணங்களின்படி, மேலும் 4300 பேர் குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.

1944 ஜூனிலிருந்து ஏறக்குறைய ஓராண்டு காலத்திற்கு கத்தோலிக்க துறவு மடங்கள் மற்றும் நிறுவனங்கள் வழங்கிய பாதுகாப்பு மற்றும் உதவிகள் குறித்த விவரங்களை அருள்பணி Birolo அவர்கள் சேகரித்து வைத்திருந்தது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கத்தோலிக்கத் துறவுமடங்களால்  காப்பாற்றப்பட்டதாக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 4300 பேரில் 3600 பேரின் பெயர் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 3200 பேர் யூதர்கள் என உரோம் நகர் யூத ஆவணக்காப்பகத்தால் நடத்தப்பட்ட ஒப்பீடு தெரிவிப்பதாகவும், மேலும் இது குறித்த ஆய்வு நடந்து வருவதாகவும் உரோம் யூத ஆவணக்காப்பகம் செப்டம்பர் 7ஆம் தேதி வியாழக்கிழமையன்று தெரிவித்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2023, 15:33