தேடுதல்

நெபுகத்னேசர் படையெடுப்பின்போது வெளியேறிய எபிரேயர்கள் நெபுகத்னேசர் படையெடுப்பின்போது வெளியேறிய எபிரேயர்கள் 

தடம் தந்த தகைமை - நெபுகத்னேசரும் அர்ப்பகசாதும்

நேபுகத்னேசர் தனது ஆட்சியின் பதினேழாம் ஆண்டில் தன் படைகளை அர்ப்பகசாது அரசனுக்கு எதிராக ஒன்று திரட்டி, அவனோடு போரிட்டு, வெற்றி பெற்றான்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஒரு காலத்தில் நெபுகத்னேசர் மன்னன் நினிவே மாநகரில் அசீரியர்களை ஆண்டுவந்தான். அப்பொழுது எக்பத்தானாவில் அர்ப்பகசாது அரசன் மேதியர் மீது ஆட்சி செலுத்திவந்தான். நேபுகத்னேசர் மன்னன் தனது ஆட்சியின் பன்னிரெண்டாம் ஆண்டில் இராகாவு நகர எல்லையில் இருந்த பரந்த சமவெளியில் அர்ப்பகசாது அரசனுக்கு எதிராகப் போர்தொடுத்தான். அண்மை நாடுகளில் வாழ்ந்தோர் யாருமே அசீரிய மன்னன் நெபுகத்னேசரோடு இணைந்து போரிட முன்வரவில்லை; அவனுக்கு அவர்கள் அஞ்சவுமில்லை. ஆனால் அவனை யாரோ ஒரு மனிதனாகவே கருதினார்கள்; அவனுடைய தூதர்களையும் இழிவுபடுத்தி வெறுங்கையராய்த் திருப்பியனுப்பினார்கள்.

ஆகவே, இந்நாடுகள் அனைத்தின் மீதும் நெபுகத்னேசர் கடுஞ் சினங் கொண்டான். நேபுகத்னேசர் தனது ஆட்சியின் பதினேழாம் ஆண்டில் தன் படைகளை அர்ப்பகசாது அரசனுக்கு எதிராக ஒன்று திரட்டினான்; அவனோடு போரிட்டு, வெற்றி பெற்று அவனுடைய காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை அனைத்தையும் முறியடித்தான்; அவனுடைய நகர்களைக் கைப்பற்றியபின் எக்பத்தானாவை வந்தடைந்தான்; அதன் காவல்மாடங்களைக் கைப்பற்றி, கடை வீதிகளில் புகுந்து கொள்ளையடித்து, அதன் எழிலைச் சீர்குலைத்தான். மேலும், அவன் இராகாவு மலைப்பகுதியில் அர்ப்பகசாதைப் பிடித்துத் தன் ஈட்டியால் குத்திக்கொன்று அவனை முற்றிலும் அழித்தொழித்தான். பின்னர், தன்னோடு சேர்ந்து போரிட்ட மாபெரும் திரளான படைவீரர்களோடு நினிவேக்குத் திரும்பி வந்தான். அங்கு அவனும் அவனுடைய படைவீரர்களும் நூற்றுஇருபது நாள் விருந்து கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 September 2023, 14:01