ஆஸ்திரேலிய பூர்வீக பழங்குடியினருக்கானக் குரல் வாக்கெடுப்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற உள்ள ஆஸ்திரேலிய பூர்வீகப் பழங்குடியின மக்களுக்கான குரல் வாக்கெடுப்பு ஓர் அரசியல் பிரச்சனைகளை மட்டுமல்ல மாறாக வாழ்க்கை நெறிமுறைப் பிரச்சனைகளை அடையாளப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர் ஆஸ்திரேலிய ஆயர்கள்.
முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு மாற்றத்தைச் சுற்றியுள்ள பிரச்சினைகள், அரசியல் பிரச்சனைகள் மட்டுமல்ல மாறாக அடிப்படை வாழ்க்கை நெறிமுறைகளுக்கான பிரச்சனை என்று குறிப்பிட்டுள்ள ஆஸ்திரேலிய ஆயர் பேரவை ஆயர்கள், மற்றவர்களின் துன்பங்களைக் கருத்தில் கொண்டு குறிப்பாகப் பழங்குடியின மக்களின் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு இந்த குரல் வாக்கெடுப்பில் வாக்காளர்கள் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஆம் அல்லது இல்லை என வாக்களிக்க வேண்டுமா என்ற ஆலோசனையை வழங்கவில்லை மாறாக, வாக்காளர்கள் தங்கள் நாட்டின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைப் புரிந்து கொண்டு குரல் வாக்கெடுப்பினை மேற்கொள்ளவேண்டும் என்றுக் கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர் ஆஸ்திரேலிய ஆயர்கள்.
பழங்குடியினர் அல்லாத ஆஸ்திரேலியர்கள் உளுரு அறிக்கையை இதயத்திலிருந்து படிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள ஆயர்கள், பூர்வீக பழங்குடியின மக்களின் உரிமைகளை பாராளுமன்றத்தில் எடுத்துரைத்துக் குரல் கொடுப்பதன் வழியாக அவர்களது வாழ்வில் சீர்திருத்த மாற்றங்களைச் செய்ய அழைப்பு விடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் பூர்வீகப் பழங்குடி இன மக்களான அபோரிஜினல் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுப்பகுதி மக்களை அங்கீகரிப்பது சார்பாக நடைபெற இருக்கும் குரல் வாக்கெடுப்பானது, அரசியலமைப்பு சீர்திருத்தங்களில் பழங்குடியினருக்கு ஏற்பட்ட விளைவுகளை முன்னிலைப்படுத்தி அதனை மாற்ற வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் வகையில் நடைபெற இருக்கின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்