தேடுதல்

பாதிக்கப்பட்ட மியான்மார் ஆலயம் பாதிக்கப்பட்ட மியான்மார் ஆலயம்  

இறைஇல்லங்கள் தாக்கப்படுவது கடவுளின் விருப்பத்திற்கு எதிரானது

நாட்டின் 16 மறைமாவட்டங்களில் ஐந்து மறைமாவட்டங்களில் பத்திற்கும் மேற்பட்ட ஆலயங்கள் தாக்கப்பட்டும் கிறிஸ்தவர்கள் இடம்பெயர்ந்தும் துன்புறுகின்றனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இறை இல்லங்கள், சமய வளாகங்கள் மற்றும் கட்டிடங்கள் குறிவைத்து  தாக்கப்படுவது கண்டிப்பாக கடவுளின் விருப்பத்திற்கு எதிரானது என்றும், சில ஆயுதமேந்திய குழுக்களால் புனிதமான இடங்கள் அழிக்கப்படுவது வருத்தத்திற்குரியது என்றும் கூறியுள்ளார், மியான்மார் கிறிஸ்தவ சபை ஆயர் ஒருவர்

ஆகஸ்ட் 12  சனிக்கிழமை மியான்மரின் கயா மற்றும் சின் மாநிலங்களில் மியான்மார் இராணுவத்தாரால் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டுள்ளதற்கு வருத்தம் தெரிவித்து ஆகஸ்ட் 18 வெள்ளிக்கிழமை உகான் செய்திகளுக்கு இவ்வாறு கூறியுள்ளார் ஹக்கா பகுதியில் சேதமடைந்த பேப்டிஸ்ட் கிறிஸ்தவ சபை ஆயர்.

கயா மாநிலத்தில் உள்ள ஒரு கத்தோலிக்க ஆலயம், சின் மாநிலத்தில் உள்ள இரண்டு திருமுழுக்கு அருளடையாள ஆலயங்கள், மியான்பார் இராணுவத்தின் வான்வழித் தாக்குதல்களால் சேதமடைந்துள்ள நிலையில் இராணுவத்தாரால் எந்தவிதமான அறிக்கையும் முறையாகக் கொடுக்கப்படாத நிலையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் இரண்டு முக்கியமான கிறிஸ்தவப் பகுதிகள் இவை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 14 அன்று சின் மாநிலத்தின் தலைநகரான ஹக்காவில் உள்ள மிகப் பெரிய மற்றும் பழமையான திருமுழுக்கு அருளடையாள ஆலயம் தாக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

55 கிறிஸ்தவ கட்டிடங்கள் உட்பட குறைந்தது 100 கிறிஸ்தவ பகுதிகள், நாட்டின் தென்கிழக்குப்பகுதி இராணுவத்தால் அழிக்கப்பட்டுள்ளன என்று மனித உரிமைகள் குழுக்கள் தெரிவித்துள்ளன. மேலும், நாட்டின் 16 மறைமாவட்டங்களில் ஐந்து மறைமாவட்டங்களில் பத்திற்கும் மேற்பட்ட ஆலயங்கள் தாக்கப்பட்டும் கிறிஸ்தவர்கள் இடம்பெயர்ந்தும் துன்புறுகின்றனர்.

5 கோடியே 40 இலட்சம் மக்களைக் கொண்ட மியான்மரின் மொத்த மக்கள்தொகையில் ஏறக்குறைய 6 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்,  பெரும்பான்மையினர் புத்தமதத்தினர். (Ucan)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2023, 12:49