தேடுதல்

ISROவின் அறிவியலாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ISROவின் அறிவியலாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள்   (ANSA)

சந்திரயான்-3ன் வெற்றிக்கு இந்திய ஆயர்கள் பாராட்டு

மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றும்போது, எவ்வளவு தூரம் வெற்றி காணமுடியும் என்பதை, நிலவில் சந்திரயானின் தரையிறக்கம் நிரூபித்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நிலவின் தென்முனையில் முதன்முறையாக ஒரு விண்கலத்தை இறக்கி சாதனை புரிந்துள்ள இந்திய வான்வெளி ஆய்வு மையமான ISROவின் அறிவியலாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு தங்கள் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளனர் இந்திய கத்தோலிக்க ஆயர்கள்.

ஆகஸ்ட் 3ஆம் தேதி நிலவில் சந்திரயான்-3ஐ தரையிறக்கியதன் வழியாக, நிலவில் விண்கலத்தை இறக்கிய நான்காவது நாடாகவும், நிலவின் தென்துருவத்தில் இறங்கிய முதல் நாடாகவும் திகழும் பாரத நாட்டிற்கு தங்கள் பாராட்டுக்களையும், அது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டுள்ள ஆயர்கள், இது பாராட்டுக்குரிய செயல் மட்டுமல்ல, மக்களனைவரின் இதயங்களையும் பெருமையால் நிரப்பியுள்ள செயல் எனவும் தெரிவித்துள்ளனர்.

ISROவின் இந்த வெற்றி இந்திய மக்கள் அனைவருக்கும் உள்ளூக்கம் தருவதாக உள்ளது என உரைத்த இந்திய ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் ஆன்ட்ரூஸ் தழத் அவர்கள், அனைத்து மக்களையும் ஒரே உணர்வுடன் ஒன்றிணைத்துக் கொண்டுவருவதற்கும் இது உதவுகிறது என தெரிவித்தார்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றும்போது, நாம் எவ்வளவு தூரம் வெற்றி காணமுடியும் என்பதை, நிலவில் சந்திரயானின் தரையிறக்கம் நிரூபித்துள்ளது தொடர்கதையாகி பல வெற்றிகளை இந்திய வான்வெளி ஆய்வு மையம் தொடரவேண்டும் என கிறிஸ்தவர்கள் தொடர்ந்து செபிப்பதாக தெரிவித்தார் இந்திய ஆயர் பேரவைத் தலைவர்.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய ஒரு மாதத்திற்கு முன் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் தன் ஆய்வுகளை நிலவில் துவக்கியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2023, 14:49