தேடுதல்

இணையதளக் கூட்டத்தில் பங்கேற்றோர் உடன்  fr. costa இணையதளக் கூட்டத்தில் பங்கேற்றோர் உடன் fr. costa 

கடவுள் எதிர்பார்க்கும் செயல் ஒருங்கிணைந்த பயணச் செயல்பாடுகள்

நாம் அனைவரும் Instrumentum Laboris என்னும் செயல்பாட்டுக் கருவிகளின் ஆசிரியர்கள், நமது குரல்கள், ஆவண பிரதிபலிப்பு மற்றும் செயலுக்கான கருவிகள். அருள்பணி. Costa

மெரினா ராஜ் - வத்திக்கான்

தூயஆவியானவர் நாம் முன்னோக்கிச் செல்ல விரும்பும் பாதைகளைக் கண்டறிந்து அடையாளம் காண்பதற்கான ஒரு அடிப்படைத் திட்டத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளார் என்றும், திருஅவையில் கடவுள் எதிர்பார்க்கும் செயலை இந்த ஒருங்கிணைந்த பாதையும் பயணமும் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன என்றும் கூறியுள்ளார் கர்தினால் பிலிப்நேரி ஃபெராவோ.

ஆகஸ்ட் 16 புதன்கிழமை ஒருங்கிணைந்த பயணத்திருஅவையின் முக்கியத்துவத்தை ஆய்வு செய்தல் என்ற கண்ணோட்டத்தில் இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்க ஆயர்கள் கூட்டமைப்பினர் (CCBI)  பங்கேற்ற இணையதளக் கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் கோவா மற்றும் டாமன் உயர் மறைமாவட்டத்தின் பேராயரும் CCBI எனப்படும் இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் பிலிப்நேரி ஃபெராவோ

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட CCBIயின் ஆலோசகரும் பொதுச்செயலருமான  இயேசுசபை அருள்பணியாளர் Giacomo Costa அவர்கள், நாம் அனைவரும் Instrumentum Laboris என்னும் செயல்பாட்டுக் கருவிகளின் ஆசிரியர்கள், நமது குரல்களே ஆவண பிரதிபலிப்பு மற்றும் செயலுக்கான கருவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்பேரவையின் இறையியல் மற்றும் திருஅவைக் கோட்பாடுகளுக்கான துறை மற்றும் ஒருங்கிணைந்த பயணக்கூட்டத்திற்கான சிறப்பு பிரிவு ஆகியவை இணைந்து நடத்திய இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பெங்களூரு மறைமாவட்டத்தைச் சார்ந்த திரு Darryl Peter Rebeiro, அவர்கள்,   கத்தோலிக்க விசுவாசிகள் மீது பெந்தேகோஸ்தே இயக்கங்களின் தாக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும்,  பெரியவர்களுக்கு மறைக்கல்வி மேய்ப்புப்பணி பற்றாக்குறை பற்றியும் வலியுறுத்திய திரு ரெபெய்ரோ அவர்கள், சமூக தொடர்பு சாதனங்கள், நற்செய்தி அறிவிப்பிற்கு புதிய, மற்றும் ஆக்கப்பூர்வமான இடத்தை வழங்குகிறது என்றும், உள்ளூர் தலத்திருஅவைகளான மறைமாவட்டம் மற்றும் பங்குத்தளங்களில் சினட்(synod) கண்காணிப்பு நிறுவப்பட வேண்டும் என்றும் முன்மொழிந்தார்.

புனே ஞான-தீபாவின் ஆசிரிய உறுப்பினரான அருள்சகோதரி பாட்ரிசியா சாண்டோஸ் அவர்கள், ஒரு பெண் சந்திக்கும் சவால்கள் மற்றும் விவாதங்களை துறவறக் கண்ணோட்டத்தில் அதன் பிரதிபலிப்பைப் பகிர்ந்து கொண்டார்.

கர்தினால் பிலிப்நேரி ஃபெராவோ அவர்கள் தலைமை தாங்கிய இந்த இணையதளக் கூட்டமானது, பல்வேறு நபர்களின் கருத்துக்கள் மற்றும் விவாதங்கள் உடன் நன்முறையில் நடைபெற்றது. மதுரை மறைமாவட்ட அருள்பணியாளர் யேசு கருணாநிதி மற்றும் அருள்பணி கில்பர்ட் டி லிமா அவர்களால் வழிநடத்தப்பட்டு கர்தினால் ஆஸ்வால்ட் கிராசியஸ் அவர்களின் முடிவுரை மற்றும் ஆசியுடன் நிறைவுற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 August 2023, 12:52