தேடுதல்

திருச்சிலுவையுடன் போராட்டத்தில் பங்கேற்கும் பாகிஸ்தான் பெண்மணி திருச்சிலுவையுடன் போராட்டத்தில் பங்கேற்கும் பாகிஸ்தான் பெண்மணி   (ANSA)

கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக கேரள திருஅவை குரல்

பிரிவினைவாத கும்பல்களின் தாக்குதல்களிலிருந்து பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் கிறிஸ்தவர்கள் காக்கப்பட ஐ.நா. நிறுவனம் தலையிட கோரிக்கை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பிரிவினைவாத கும்பல்களின் தாக்குதல்களிலிருந்து பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் கிறிஸ்தவர்கள் காக்கப்பட ஐ.நா. நிறுவனம் தலையிட வேண்டும் என விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது கேரள ஆயர்கள் பேரவை.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் Jaranwala என்னுமிடத்தில் கிறிஸ்தவர்களின் வீடுகளும் கோவில்களும் தாக்கப்பட்டது, மற்றும் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் குறிவைத்து தாக்கப்படுவது என்பது பற்றி எடுத்துரைக்கும் கேரள கத்தோலிக்க ஆயர்கள், ஐ.நா. நிறுவனம் இவை குறித்தவைகளில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளனர்.

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது எவ்வித தடையுமின்றி தொடர்ந்துகொண்டிருக்கிறது எனக் கவலையை வெளியிடும் கேரள ஆயர்கள், இரு நாடுகளிலும் பெரும்பான்மை சமுதாயங்களால் சிறுபான்மை சமுதாய மக்கள் குறிவைத்து தாக்கப்படுவது தொடர்கிறது என தெரிவித்துள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் மூன்று மாதங்களுக்கு மேலாக இடம்பெறும் மோதல்களில் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கட்டாய இடம்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி Jaranwala என்னுமிடத்தில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன, 19 கிறிஸ்தவக் கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 2.3 விழுக்காட்டினரும்,  பாகிஸ்தானின் மக்கள்தொகையில் 1.5 விழுக்காட்டினரும் கிறிஸ்தவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2023, 14:53