தேடுதல்

பினகாசு மனைவியைத் தாங்கிப்பிடிக்கும் தாதியர் பினகாசு மனைவியைத் தாங்கிப்பிடிக்கும் தாதியர் 

தடம் தந்த தகைமை : பினகாசு மனைவியின் இறப்பு!

அப்போது பினகாசின் மனைவி “இஸ்ரயேலினின்று மாட்சி அகன்றுவிட்டது, ஏனெனில், கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது” என்று கூறினாள்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அந்நாட்களில் பினகாசின் மனைவியான ஏலியின் மருமகள் நிறைகர்ப்பினியாய் இருந்தாள். கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதையும் தன் மாமனாரும் கணவரும் இறந்து விட்டதையும் கேட்டு அவள் பேறுகால வேதனைக்குள்ளாகி, குனிந்து மகவைப் பெற்றெடுத்தாள். அவள் சாகும் தருவாயில் இருந்தபோது அவள் அருகில் இருந்த தாதியர் அவளை நோக்கி, “அஞ்சாதே, நீ ஒரு மகனை பெற்றெடுத்துள்ளாய்” என்று கூறினர். அவளோ அதற்கு மறுமொழி கூறவில்லை; அதைப் பொருட்படுத்தவுமில்லை. கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதையும் தன் மாமனாரும் கணவரும் இறந்ததையும் முன்னிட்டு 'இஸ்ரயேலினின்று மாட்சி அகன்று விட்டது' என்னும் பொருள்பட அவள் தன் குழந்தைக்கு ‘இக்க போது’ என்று பெயரிட்டாள். அப்போது அவள், “இஸ்ரயேலினின்று மாட்சி அகன்றுவிட்டது, ஏனெனில், கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது” என்று கூறினாள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2023, 13:45