தேடுதல்

மங்கோலிய மருத்துவர் மங்கோலிய மருத்துவர்  

திருத்தந்தையின் வருகைக்காக காத்திருக்கும் இறைஇரக்க இல்லம்

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறார்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் வகையில் ஒரு சமூக மையத்தைத் திறக்க உள்ளுணர்வு ஏற்பட்டது

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மங்கோலிய பயணத்தின் இறுதிநாளின் போது ஆசீர்வதித்து திறக்கப்பட இருக்கும் இறைஇரக்க இல்லமானது திருத்தந்தையின் வருகைக்காக  மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றது என்றும், தொண்டுப்பணிகளின் உறுதிமொழியாகவும் சின்னமாகவும் இறைஇரக்க இல்லம் திகழும் என்றும்  பிதேஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 4 திங்கள்கிழமை மங்கோலிய பயணத்தின் இறுதிநாளின் போது ஆசீர்வதித்து திறக்கப்பட இருக்கும் இறைஇரக்க இல்லமானது மங்கோலியாவில் உள்ள சிறிய கத்தோலிக்க சமூகத்தின் இருப்பு, வாழ்க்கை மற்றும் உயிர்ப்பிக்கும் பிறரன்புப் பணிகளுக்கான அடையாளமாக திகழும் என்றும் பிதேஸ் செய்தி கூறுகின்றது.

திறப்பு விழாவைக் கருத்தில் கொண்டு கட்டமைப்பை நிறைவு செய்வதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், நற்செய்தி அறிவிப்பை பறைசாற்றுவதற்கும், தொண்டுப் பணிகளை ஆற்றுவதற்கும் மறைப்பணி ஒத்துழைப்பின் பலனைப் புரிந்துகொள்ளவும் இவ்வில்லம் உருவாக்கப்படும் திட்டமானது  இருக்கின்றது என்றும் அச்செய்தி தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய திருப்பீட துறையின் உதவி மற்றும் தேசிய வழிகாட்டுதலின் உறுதியான உதவியால் ஆதரிக்கப்பட்ட இத்திட்டமானது 2019ஆம் ஆண்டில் உலன்பதார் கர்தினால் ஜியோர்ஜியோ மாரெங்கோ மறைப்பணியாளார்களுடன் கலந்தாலோசித்த போது குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறார்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் வகையில் ஒரு சமூக மையத்தைத் திறக்க உள்ளுணர்வு  ஏற்பட்டதாகவும்

அந்த உள்ளுணர்வு வளர்ந்து, மக்களின் வளர்ச்சி மற்றும் பாதுக்காப்பிற்கான திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரின் நோக்கத்திலும் இறைஇரக்க இல்லமாக உருவாகி வருகின்றது.

மங்கோலியாவின் மற்ற பகுதிகளைப் போலவே பயங்கோல் மாவட்டத்திலும், சமீப ஆண்டுகளில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமூக-பொருளாதார இடைவெளி விரிவடைந்து வருகிறது என்றும், கல்வி, நலவாழ்வு,மற்றும் பிற அடிப்படை தேவைகளுக்கான பணிகளில் ஏற்றத்தாழ்வுகளும் இடைவெளிகளும் பிரதிபலிக்கின்றன என்றும் அச்செய்தி கூறுகின்றது.

அரசு குடிமக்களுக்கு இலவச மருத்துவ உதவிகளை வழங்கி வந்தாலும், பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்கள் தொடர்பான பிரச்சனைகளால், மத்திய மாவட்டங்களில் ஏறக்குறைய 7,000 மக்கள் பெரும் பிரச்சனைகளை அனுபவித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.   

பன்னாட்டு அமைப்புகளால் வெளியிடப்பட்ட தகவல்களின்படி 2021ஆம் ஆண்டில் உலான்பதாரில் வறுமை 27.4 விழுக்காடாகவும், வேலையின்மை 9.6 விழுக்காடாகவும் இருந்துள்ளது என்றும், இவ்விழுக்காடு உலக நலவாழ்வு நிறுவனத்தால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்ட வரம்பை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் தெரியவருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 July 2023, 14:07