தேடுதல்

 Lampedusa கடற்கரைப்பகுதி Lampedusa கடற்கரைப்பகுதி   (ANSA)

லாம்பதுசாவில் கடல்ஞாயிறு தினக் கொண்டாட்டங்கள்

கர்தினால் மோன்தே நேக்ரோ அவர்களால் லாம்பதுசாவில் நிறைவேற்றப்பட இருக்கும் நற்கருணை கொண்டாட்டமானது இத்தாலியின் ராய் 1 தொலைக்காட்சியில் நேரலையாக ஒலிபரப்பப்பட உள்ளது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மனித வாழ்க்கையை வரவேற்கவும், பணி, சந்திப்பு,  பரஸ்பரம் ஆகியவற்றுக்கான வாய்ப்பாக கடல்சார் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும் திருத்தந்தையின் வேண்டுகோளின் பேரில் கடல்சார் நாளை நினைவுகூர விரும்புவதாக தெரிவித்தார் இத்தாலிய ஆயர் பேரவையின் கடல்சார் மேய்ப்புப்பணியின் இயக்குனர் அருள்பணி புருனோ பிஞ்னாமி.

ஜூலை 8 சனிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Lampedusa விற்கு வருகை தந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகும், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் கடல் ஞாயிறு தினத்தையொட்டி, கடல்சார் மேய்ப்புப்பணி, குடிபெயர்ந்தோர் அறக்கட்டளை ஆகியவை இணைந்து சிசிலியன் தீவில் தொடர்ச்சியான நிகழ்வுகளை ஊக்குவிக்கின்றன.

மத்திய தரைக்கடல், குடிபெயர்ந்தோரின் கல்லறை என்பதிலிருந்து வேறுபட்டு மைதானமாக மாறிக்கொண்டு வருகின்றது என்றும், கடலில் மூழ்கி இறந்த குடிபெயர்ந்தோருக்கான இவ்வாண்டு நினைவுநாளானது கடலை வாழ்விடமாகக் கொண்ட நம் சகோதரர்களுக்காக யார் அழுதோம் என்ற கருப்பொருளில் கொண்டாட இருப்பதாகவும்  தெரிவித்தார் அருள்பணி புரூனோ.

ஜூலை 8 சனிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் இரவு 9 மணிக்கு லாம்பதுசா அரசு மற்றும் கத்தோலிக்க தலைவர்கள், அருள்பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மீனவர்கள் குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் அனைவருடனான ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துரைத்தார் அருள்பணி புரூனோ.

மேலும், ஜூலை 9 ஞாயிற்றுக்கிழமை காலை  கர்தினால் மோன்தே நேக்ரோ அவர்களால் நிறைவேற்றப்பட இருக்கும் நற்கருணை கொண்டாட்டமானது இத்தாலியின் ராய் 1 தொலைக்காட்சியில் நேரலையாக ஒலிபரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார் அருள்பணி புரூனோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 July 2023, 13:30