பல்சுவை – தூய கார்மேல் அன்னை
மெரினா ராஜ் – வத்திக்கான்
அகரம் இல்லா அகராதி பொருளற்று இருப்பது போல அன்னையில்லா அன்பும் கூட பொருளற்றதாகக் காணப்படுகின்றது. எத்தனை கோடி யுகங்கள் மாறினாலும் ஒன்றுக்கு நிகராய் எப்போதும் மற்றொன்று உண்டு இவ்வுலகில். நிகரில்லா ஒன்று உலகினில் உண்டென்றால் அது அன்னையின் ஒப்பற்ற அன்பே. மாசற்ற சுவாசத்தை நமக்களித்து, கலப்பட மில்லாத உயிர்ப்பால் தருபவர் அன்னை. இயற்கை உரம் கொண்ட நிலம் போன்று நம்மை வலுவூட்டி செழிப்பாக்குபவர். வாய்மை தவறாதவர், தாய்மையுள்ளம் கொண்டவர். நலமோடு நாம் பிறக்க நம்மை கருவிற் சுமந்த அன்னையை மனக்கோவில் கருவறையில் தெய்வமாக்கி வணங்கும் கடமை நமக்குண்டு. அன்னைக்கே இத்தனை சிறப்பென்றால் இறைமகனை ஈன்ற இறையன்னைக்கு இன்னும் அதிக சிறப்பு பெற்றவர். அன்னையின் சிறப்புக்களை எண்ணி மகிழும் நாம் புனித கார்மேல் அன்னையின் திருவிழாவினைச் சிறப்பிக்கும் இந்நாளில் புதுவை புனித கார்மேல் அன்னை சபை சகோதரிகளைப் பற்றியும் தூய கார்மேல் அன்னை பக்தி வரலாறு, இந்தியாவில் இப்பக்தி முறை பரவிய காரணம் பற்றியும் அவர்களது சபையினர் இப்பக்தியை பயிற்சிக்கும் மற்றும் வாழ்வாக்கும் விதம் பற்றியும் அறிந்துகொள்வோம். புனித கார்மேல் அன்னையின் திருவிழாவினைச் சிறப்பிக்கும் இந்நாளில் கார்மேல் அன்னை பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க புதுவை தூய கார்மேல் அன்னை சபை இல்லத்தின் தலைமை சகோதரி அர்ச்சனா அவர்களையும் அவரின் உடன் சகோதரிகள் அனைவரையும் வத்திக்கான் வானொலி நேயர்கள்சார்பில் அன்புடன் வரவேற்கின்றோம்.
அன்னை என்னும் தெய்வத்தை உயிருள்ள போதே வழுவாமல் மறவாமல் காத்திடுவோம். ஏனெனில் இழந்தால் கிடைக்காதது நம் தாயின் அன்பு மட்டுமே.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்