தேடுதல்

அமைதிக்காகப் போராடும் மக்கள் அமைதிக்காகப் போராடும் மக்கள்   (AFP or licensors)

தென்சூடானில் பரவிவரும் மோதல்கள்!

ஏற்கனவே மோதல்களால் பலவீனமடைந்துள்ள பகுதிகளை இந்த மோதல் மேலும் சீர்குலைத்து வருகிறது : தென்சூடான் ஆயர்கள்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தென்சூடானில் மோதல்கள்  பரவிவரும் வேளை, அனைத்துலக சமுதாயத்தின் தலையீடு அவசியம் தேவை என்றும் இதுகுறித்து தாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

சூடான் தலைநகர், Khartoum-இல் பன்னிரெண்டு வாரங்களாக நிகழ்ந்துவந்த மோதல் தற்போது தெற்கே பரவி, அங்குத் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களை மேலும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ள வேளை இவ்வாறு தெரிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

ஏற்கனவே மோதல்களால் பலவீனமடைந்துள்ள பகுதிகளை இந்த மோதல் மேலும் சீர்குலைத்து வருகிறது என்றும், இதனால் தாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் அனைத்துலகச் சமூகத்திற்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

சூடானின் சக்திவாய்ந்த இஸ்லாமியக் குழுக்களின் செல்வாக்கின் கீழ், வழிபாட்டுத்தலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. மேலும் மதவாதிகள் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்படுவதுடன் சில வேளைகளில் படுகொலையும் செய்யப்படுகின்றனர்.

சூடானில் 20 இலட்சம் கிறிஸ்தவர்கள் இருப்பதாக Open Doors என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் சண்டையில் இணைந்துள்ள நிலையில் அக்கிறிஸ்தவர்கள் அனைவரும் இப்போது ஆபத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கிறது அந்நிறுவனம். (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 July 2023, 15:12