தேடுதல்

புனித ஜான் மரிய வியான்னி புனித ஜான் மரிய வியான்னி  

பல்சுவை - புனித ஜான் மரிய வியான்னி

ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் அருள்பணித்துவ அழைப்பு, அவரவர் திறமையின் அடிப்படையில் வழங்கப்படும் சன்மானம் அல்ல, மாறாக, இறைவனின் பேரன்பினால் வழங்கப்படும் ஒரு பெரும் கொடை . - புனித ஜான் மரிய வியான்னி.
புனித ஜான் மரிய வியான்னி - அருள்பணி. இருதயராஜ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

எளிமையான வாழ்க்கை, பரிவுடன் கூடிய செயல்கள், திருவருளடையாளங்களில் பற்றுறுதி, இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொண்டு மனிதராக வாழும்போதே புனித பண்புகளால் சிறந்து விளங்கியவர் புனித ஜான் மரிய வியான்னி. திருநற்கருணையின் முன்னால் செலவிடும் நேரத்தைப் பொன்னான நேரமாகக் கருத வேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அதன்படியே வாழ்ந்தவர். தனது வாழ்வின் ஆற்றல் திருநற்கருணையில் இருந்தே கிடைக்கின்றது என்பதனை தனது செப செயல்பாடுகளால் வெளிப்படுத்தியவர். எளிமையான பிறரன்புச் செயல்கள் வழியாக இறைமக்களாகிய நமக்கு விண்ணகம் செல்லும் புனிதத்தின் பாதையைக் காட்டியவர். தான் குருவாக திருப்பொழிவு பெற்றால் கடவுளுக்காக ஏராளமான ஆன்மாக்களை வென்றெடுப்பேன் என்ற கூறி அவ்வாறே பல ஆன்மாக்களை இறைபாதம் கொண்டு சேர்த்தவர். ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் அருள்பணித்துவ அழைப்பு, அவரவர் திறமையின் அடிப்படையில் வழங்கப்படும் சன்மானம் அல்ல, மாறாக, இறைவனின் பேரன்பினால் வழங்கப்படும் ஒரு பெரும் கொடை என்பதை நமக்கு உணர்த்தியவரும்  புனித ஜான் மரிய வியான்னியே. இத்தகைய சிறப்பு வாய்ந்த புனிதரும் பங்குத்தந்தையர்களின் பாதுகாவலருமான புனித ஜான் மரிய வியான்னி பற்றிய கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி இருதயராஜ்.

சிவகங்கை மறைமாவட்டத்தை சார்ந்த அருள்பணி இருதய ராஜ் அவர்கள், சிறந்த சிந்தனையாளர். தனது மேற்படிப்புக்களை பெல்ஜியத்தில் முடித்த இவர் 16ஆண்டுகள் ஜெர்மனியில் பணியாற்றியுள்ளார். தற்போது சி கே மங்களம் என்னும் பங்குத்தளத்தில் பங்குத்தந்தையாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் தந்தை அவர்களை புனித ஜான் மரிய வியான்னி பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2023, 17:25