தேடுதல்

நிக்கராகுவாவின் ஆயர் Rolando Álvarez Lagos நிக்கராகுவாவின் ஆயர் Rolando Álvarez Lagos   (AFP or licensors)

நிக்கராகுவாவின் ஆயர் Rolando Álvarez, La Modelo சிறைக்கு மாற்றம்

தனக்கு நிபந்தனையற்ற விடுதலை வழங்கவேண்டும் மற்றும், சிறையில் உள்ள ஐந்து அருள்பணியாளர்களையும் விடுவிக்க வேண்டும் : ஆயர் Rolando Álvarez

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நிக்கராகுவாவின் ஆயர் Rolando Álvarez Lagos அவர்கள், அந்நாட்டை விட்டு வெளியேற மறுத்த நிலையில் ஜூலை 5 அன்று  La Modelo Tipitapa  சிறைக்குத் திரும்பியதாக Divergentes செய்தித்தாள் தெரிவிக்கின்றது.

ஆயர் Álvarez அவர்கள் ஜூலை 4, அன்று சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு வத்திக்கான் நியமித்த ஒரு பிரதிநிதியை சந்தித்தார் என்றும், உரோமை செல்ல அவரை இணங்க வைக்க முயன்றதவும், அந்த வாய்ப்பை ஆயர் நிராகரித்ததாகவும் அச்செய்தித்தாள் தெரிவிக்கின்றது.

மேலும் தனக்கு நிபந்தனையற்ற விடுதலை வழங்கவேண்டும் என்றும், சிறையில் உள்ள ஐந்து அருள்பணியாளர்களையும் விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளதுடன், நாடு முழுவதும் உள்ள உரோமன் கத்தோலிக்க மறைமாவட்டங்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவத்தை கைவிடவும், மதக் குழுக்கள் மற்றும் தலைவர்களை இலக்கு வைத்து துன்புறுத்துவதை நிறுத்தவும் ஆயர் Rolando Álvarez அவர்கள், அரசிற்கு அழைப்பு விடுத்ததாகவும் அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கின்றது.

ஆயர் Rolando Álvarez அவர்கள் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் தேதியன்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதியன்று, 222 அரசியல் கைதிகளுடன் அமெரிக்காவிற்குக் கட்டாயமாக நாடுகடத்தப்பட மறுத்த நிலையில் அவர்மீது விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு 26 ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவரது குடியுரிமை மற்றும் வாழ்நாள் சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டு La Modelo Tipitapa சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 July 2023, 15:06