தேடுதல்

மங்கோலியாவின் UlanBator அப்போஸ்தலிக்க நிர்வாகி கர்தினால் Giorgio Marengo. மங்கோலியாவின் UlanBator அப்போஸ்தலிக்க நிர்வாகி கர்தினால் Giorgio Marengo. 

மங்கோலிய பயணம் கிறிஸ்தவ மக்களின் வலுவான அடையாளம்

மங்கோலிய தலத்திருஅவையில் கிறிஸ்தவ வாழ்வின் முகத்தையும் அம்சங்களையும் மீட்டெடுக்கும் வகையில் காணொளியானது அமைந்துள்ளது. கர்தினால் மரேங்கோ

மெரினா ராஜ் – வத்திக்கான்

மங்கோலிய மக்கள் நல்லவர்கள், எல்லோரையும் அன்பு செய்பவர்கள் என்றும், திருத்தந்தையின் மங்கோலிய திருத்தூதுப்பயணம் ஓர் அழகான விஷயமாகவும், அனைத்துக் கிறிஸ்தவ மக்களின் மிகவும் வலுவான அடையாளமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் கர்தினால் மரேங்கோ

அண்மையில் பிதேஸ் செய்தி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மங்கோலிய தலத்திருஅவை பற்றிய காணொளிப் பதிவினைக் குறித்து இவ்வாறு தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் மங்கோலியாவின் UlanBator அப்போஸ்தலிக்க நிர்வாகி கர்தினால் Giorgio Marengo.

Fides என்னும் செய்தி நிறுவனத்தால் வரும் வாரங்களில் வெளியிடப்பட இருக்கும் திரைப்படத் தொடரின் முதல் காணொளியானது மங்கோலிய தலத்திருஅவையில் கிறிஸ்தவ வாழ்வின் முகத்தையும் அம்சங்களையும் மீட்டெடுக்கிறது என்றும், நன்றியுணர்வு, ஒன்றிணைதல், போன்றவற்றை வெற்றிக்கான திட்டங்களின் வழியாக அல்ல மாறாக நம்பிக்கையின் வழியாகக் கொண்டு வருகின்றது என்றும் கூறியுள்ளார் கர்தினால் மரேங்கோ.

எல்லையற்ற புல்வெளிகள், குதிரை மந்தைகள், தலத்திருஅவை ஆலயங்கள், பாரம்பரிய  மங்கோலிய ஜெர்ஸ் வீடுகள், ஆலயம் கட்ட நிலம் வழங்கிய குறிப்புக்கள், ஆயர் பதில்லாவின் கல்லறை புகைப்படங்கள், போன்றவைகள் இடம்பெற்றுள்ள இக்காணொளியில், காய்கறி உற்பத்திக்காக பெரிய பசுமை இல்லத்தில் பணிபுரியும் பெண்கள், நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு நன்மை பயக்கும் நல்ல விஷயங்களை உருவாக்க தலத்திருஅவையால் விதைக்கப்பட்ட படைப்புக்களில் பசுமை இல்லமும் ஒன்று என்று கூறியுள்ளனர்.

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் மேற்கொள்ள நினைத்த மங்கோலியாவிற்கான திருத்தூதுப் பயணம் அவரது உடல்நிலை காரணமாக நடைபெறாத நிலையில் தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் மேற்கொள்ளப்பட இருக்கும் இப்பயணம் கிறிஸ்தவர்களின் மிக வலிமையான அடையாளம் என்றும் கூறியுள்ளார் கர்தினால் மரேங்கோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2023, 14:01