தேடுதல்

Kherson பாதிக்கப்பட்ட பகுதி Kherson பாதிக்கப்பட்ட பகுதி 

கடவுள் மீது கொண்ட நம்பிக்கை வலுப்பெறுகின்றது

கடவுள் அவருடைய கரங்களாக செயல்பட நம்மை அனுமதிக்கிறார் என்றும், மிகவும் தேவையிலிருப்பவர்களுக்கு உதவ நம்மை அனுப்புகிறார்

மெரினா ராஜ் – வத்திக்கான்

கட்டிடங்கள் அழிக்கப்படுதல், விலங்குகள் நீரில் மூழ்குதல், வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்டல் போன்ற கடினமான  சூழ்நிலைகளிலும், கடவுள்மீது கொண்ட நம்பிக்கை மிக உறுதியாக இருந்தது என்றும், தீமை ஒருபோதும் வெல்ல முடியாது என்ற வலிமையைப் பெற முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார் அருள்பணி இக்னேசியஸ் மொஸ்கலிக்.

உக்ரைனின் தற்போதைய நிலைமை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிவரும் உதவிகள், மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான முயற்சிகள் ஆகியவை பற்றி புனித விளாடிமீர் பேராலய அதிபர் தந்தையுடன் உரையாடும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார் தேவையில் இருக்கும் பன்னாட்டுத் தலத்திருஅவையினருக்கு உதவும் அமைப்பின் செயல்பாட்டு நிகழ்வு பங்குதாரரான அருள்பணி இக்னேசியஸ் மொஸ்கலிக்.

உக்ரைனின் நோவா ககோவ்கா அணை அழிக்கப்பட்ட போது மக்கள் அதிகமாக அச்சமுற்றனர் என்றும், போரின் தொடக்கத்தில் இருந்ததைப் போலவே இந்த புதிய சூழ்நிலையையும் எதிர்கொண்டு கடவுள் மீது கொண்ட நம்பிக்கையை  வலுபடுத்தினோம் என்றும் கூறியுள்ளார் அருள்பணி இக்னேசியஸ்

கடவுளுக்கும், தாராள மனதுடன் எப்போதும் உதவ தயாராக இருக்கும் அனைவருக்கும் நன்றி என்று  கூறிய அருள்பணி இக்னேசியஸ் அவர்கள், கடவுள் அவருடைய கரங்களாக செயல்பட நம்மை அனுமதிக்கிறார் என்றும், மிகவும் தேவையிலிருப்பவர்களுக்கு உதவ  நம்மை அனுப்புகிறார் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2023, 14:14