தேடுதல்

கடலில் பயணித்து வரும் புலம்பெயர்ந்தோர் கடலில் பயணித்து வரும் புலம்பெயர்ந்தோர்   (AFP or licensors)

புலம்பெயர்ந்த குழந்தைகளை பாதிக்கும் மசோதாவை கைவிடுக!

சட்டவிரோத இடம்பெயர்வு மசோதா, மோதலுக்கும், துன்புறுத்தலுக்கும் உள்ளாகி தப்பிச் செல்லும் மக்களின் பாதுகாப்பைத் தேடும் உரிமையைப் பறிக்கிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இங்கிலாந்தின் உயர்மட்ட குழந்தைகள் தொண்டு நிறுவனங்கள் புலம்பெர்ந்தோர் தொண்டு நிறுவனங்கள், மதத் தலைவர்கள், மருத்துவ அமைப்புகள் மற்றும் பிறருடன் இணைந்து, சட்டவிரோத இடம்பெயர்வு மசோதாவின் ஒரு பகுதியாக புலம்பெயர்ந்தோர் குழந்தைகளைப் பாதிப்படையச் செய்யும் திட்டங்களை கைவிடுமாறு அந்நாட்டு அரசிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

சட்டவிரோத இடம்பெயர்வு மசோதா, மோதலுக்கும், துன்புறுத்தலுக்கும் உள்ளாகி தப்பிச் செல்லும் மக்களின் பாதுகாப்பைத் தேடும் உரிமையைப் பறிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் எப்படி இந்நாட்டிற்குள் வந்தார்கள் என்பதன் அடிப்படையில் அவர்களுக்குத் தண்டனை அளிக்கும் விதமாக அமையும் என்று அந்நாட்டின் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் எடுத்துக்காட்டியுள்ளனர்.

ஏற்கனவே தங்கள் வீட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்துக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டதன் பயங்கரமான அதிர்ச்சியை அனுபவித்த குழந்தைகளுக்கு இம்மசோதா மேலும் துயரங்களை ஏற்படுத்தும் என்று அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளன இவ்வமைப்புகள்.

இந்த மசோதா நடைமுறைக்கு வந்த முதல் மூன்று ஆண்டுகளில் 45,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளை இது பாதிக்கலாம் என்று புலம்பெயர்ந்தோர் கவுன்சில் அமைப்பின் மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது என்றும், இதில் பெற்றோரிடமிருந்து பிரிந்து இங்கிலாந்துக்கு மட்டும் வந்த 15,000 குழந்தைகள் உள்ளனர் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 July 2023, 15:17