தேடுதல்

கடவுளின் பேழையைக் கைப்பைற்றிச் செல்லும் பெலிஸ்தியர் கடவுளின் பேழையைக் கைப்பைற்றிச் செல்லும் பெலிஸ்தியர்  

தடம் தந்த தகைமை : கடவுளின் பேழையைக் கைப்பற்றிய பெலிஸ்தியர்!

இஸ்ரயேலருள் முப்பதாயிரம் காலாட்படையினர் போரில் மாண்டனர். கடவுளின் பேழை பெலிஸ்தியரால் கைப்பற்றப்பட்டது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை பாளையத்திற்குள் வந்ததும், இஸ்ரயேல் அனைவரும் நிலமே அதிரும் அளவிற்குப் பெரும் ஆரவாரம் செய்தனர். இந்த ஆரவாரத்தை கேட்டதும் பெலிஸ்தியர், “எபிரேயரின் பாளையத்தில் இப்பெரும் ஆரவாரமும் கூச்சலும் ஏன்?” என்று வினவினர். ஆண்டவரது உடன்படிக்கை பேழை பாளயத்தினுள் வந்து விட்டது என்று அறிந்து கொண்டனர். அப்போது பெலிஸ்தியர் பேரச்சம் கொண்டு; “கடவுள் பாளையத்திற்குள் வந்துவிட்டார். நமக்கு ஐயோ கேடு! இதற்கு முன்பு இப்படி நேர்ந்ததே இல்லை! நமக்கு ஐயோ கேடு! இத்துணை வலிமைமிகு கடவுளிடமிருந்து நம்மைக் காப்பவர் யார்? இக்கடவுள்தான் எகிப்தியரைப் பாலை நிலத்தில் பல்வேறு வாதைகளால் துன்புறுத்தியவர்! பெலிஸ்தியரே! துணிவு கொள்ளுங்கள்! ஆண்மையோடு இருங்கள்! எபிரேயர் உங்களுக்கு அடிமைகளாக இருந்தது போல, நீங்களும் எபிரேயேருக்கு அடிமைகளாக ஆகாதபடிக்கு ஆண்மையோடு போரிடுங்கள்!” என்றனர்.

பெலிஸ்தியர் மீண்டும் போர் தொடுத்தனர். இஸ்ரயேலர் தோல்வியுற, அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கூடாரத்திற்குத் தப்பியோடினான். அன்று மாபெரும் உயிர் சேதம் ஏற்பட்டது. இஸ்ரயேலருள் முப்பதாயிரம் காலாட்படையினர் போரில் மாண்டனர். கடவுளின் பேழை பெலிஸ்தியரால் கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரு புதல்வர்களான ஒப்பினியும் பினகாசும் மாண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 July 2023, 10:04