தேடுதல்

செங்கல் சூளைகளில் பணியாற்றும் சிறார் செங்கல் சூளைகளில் பணியாற்றும் சிறார்  (AFP or licensors)

செங்கல் சூளை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி

ஏழ்மையால் வாடும் மற்றும் செங்கல் சூளையில் பணிபுரியும் குடும்பங்களின் குழந்தைகளுக்கென பாகிஸ்தான் திருஅவையின் மூன்று கல்வி மையங்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் செங்கல் சூளைகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் குடும்பங்களின் சிறார்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அம்மாநிலத்தில் மூன்று கல்வி மையங்களைத் துவக்கியுள்ளது தலத்திருஅவை.

ஏழ்மையால் வாடும், மற்றும் செங்கல் சூளையில் பணிபுரியும் குடும்பங்களின் குழந்தைகளுக்கென மூன்று கல்வி மையங்களை ஆசீர்வதித்துத் துவக்கிவைத்தார் Faisalabad ஆயர் Indrias Rehmat.

பஞ்சாபின் Toba Tek Singh மாவட்டத்தில் ஏழைகளின் முன்னேற்றத்திற்கென உருவாக்கப்பட்ட சிறுநகரில் இந்த கல்வி மையங்கள், மனிதகுல மேம்பாட்டிற்காக உழைக்கும் அருள்பணி போனி மெண்டிஸ் அமைப்பின் உதவியுடன் கட்டப்பட்டுள்ளன.

ஏற்கனவே 60 குழந்தைகளுடன் தன் கல்விப்பணியை துவக்கியுள்ள இந்த மையங்கள், மேலும் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் கல்வி கற்க வருவார்கள் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 June 2023, 14:11