தேடுதல்

அமைதிக்கான நடைபயணத்தில் இளைஞர்கள் அமைதிக்கான நடைபயணத்தில் இளைஞர்கள் 

அமைதி சாத்தியமானது என உணர்த்தும் இளையோர்

Arezzo முதல் Rondine Cittadella della Pace வரையுள்ள 10 கிமீ தூர நடைபயணத்தில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஒன்றிணைந்து நடப்பது, மகிழ்ச்சி, நட்புறவு, சகோதர உறவு ஆகியவற்றை வெளிப்படுத்துவதுடன், அமைதி சாத்தியமாகும் என்பதை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கின்றது என்றும், இளைஞர்கள் அதற்கான முயற்சியை தாங்கள் வாழும் நகரங்களில் ஊர்களில் வெளிப்படுத்துகின்றார்கள் என்றும் கூறினார் Arezzo ஆயர் Andrea Migliavacca.

ஜூன் 8 வியாழன் முதல்11 ஞாயிற்றுக்கிழமை வரை இத்தாலியின் Rondine Cittadella della Pace என்ற இடத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் YouTopic Fest 2023 அமைதிக்கான கூட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற நடைப்பயணத்தில் பங்கேற்றபோது இவ்வாறு கூறினார் Arezzo-Cortona-San Sepolcro மறைமாவட்ட ஆயர் Andrea Migliavacca.

4 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Matteo Zuppi அவர்கள் தலைமையில் 70 பேச்சாளர்கள் பங்கேற்கும் 40 கூட்டங்களும், அமைதிக்கான விழிப்புணர்வு நடைபயணங்களும் நடைபெற்று வருகின்றன.

Arezzo முதல் Rondine Cittadella della Pace வரையுள்ள 10 கிமீ தூர நடைபயணத்தில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்ட நிலையில் இந்த நடைபயணமானது பன்னாட்டு மோதல்கள் மற்றும் போர் முடிவிற்காகவும், உடன்பிறந்த உறவு, மகிழ்ச்சி, மற்றும் அமைதிக்காகவும் நடத்தப்பட்டது என்றும் கூறினார் ஆயர் Migliavacca.

ஒன்றிணைந்து நடப்பது, மகிழ்ச்சி, நட்புறவு, சகோதரஉறவு ஆகியவற்றை தங்களது ஒன்றிணைப்பால் வெளிப்படுத்தும் இளைஞர்கள் இவ்வுலகிற்கு அமைதி  நிச்சயம் சாத்தியமாகும் என்பதை தங்கள் செயல்களால் வெளிப்படுத்துகின்றனர் என்றும் கூறினார் இந்நடைபயணத்தில் கலந்து கொண்ட  Rondine நகரத்தலைவர் Franco Vaccari,

விழாவின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கர்தினால் ஷூப்பி அவர்கள், உக்ரைன் போரில் அமைதிக்கான பாதையை உருவாக்குவதில் திருத்தந்தை தொடர்ந்து முயற்சி செய்கின்றார் என்றும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 June 2023, 14:04