தேடுதல்

துயருற்று அழும் உறவினர்கள் துயருற்று அழும் உறவினர்கள் 

சிறைக்குள் மோதல் குறித்து கேள்வி எழுப்பும் ஹொண்டூராஸ் திருஅவை

ஹொண்டூராஸ் ஆயர்கள் - ஊழல் நிறைந்த சிறைத்துறை அமைப்பு மாற்றியமைக்கப்படும் காலம் எப்போது வரும்?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஹொண்டூராஸ் பெண்கள் சிறையில் இரு குற்றக் கும்பல் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் குறைந்தபட்சம் 48 பெண்கைதிகள் உயிரிழந்தது குறித்து அரசு சரியான பதில் வழங்கவேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளது ஹொண்டூராஸ் தலத்திருஅவை.

48 பெண் கைதிகள் உயிழந்த சூழல் ஆராயப்பட வேண்டும், அனைவருக்கும் பாதுகாப்பை உறுதியளிக்கும் அமைப்புமுறை சிறைக்குள் வழங்கப்படவேண்டும் என கூறும் ஆயர்கள், துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் எவ்வாறு சிறைக்குள் கைதிகள் வசம் கிடைத்தன என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளனர்.

ஹொண்டூராஸ் நாட்டின் ஊழல் நிறைந்த சிறைத்துறை அமைப்பு தோல்வியடைந்துள்ளது எனக் கூறும் தலத்திருஅவை, அதனை மாற்றியமைக்கும் காலம் எப்போதுவரும் என்ற ஏக்கத்தையும் வெளியிட்டுள்ளது.

ஜூன் மாதம் 20ஆம் தேதி தலைநகர் Tegucigalpaவுக்கு 20 மைல் தொலைவிலுள்ள Tamaraவிலுள்ள பெண்கைதிகள் புனர்வாழ்வு மையத்தில் இரு கும்பல்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில், தீயாலும், துப்பாக்கிச் சூட்டாலும், கத்திக் குத்துகளாலும் 48 பெண்கைதிகள் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 June 2023, 14:24