தேடுதல்

ரூத்து தன் கைகளில் மகனைத் தாங்கிய  மகிழ்வில் ரூத்து தன் கைகளில் மகனைத் தாங்கிய மகிழ்வில் 

தடம் தந்த தகைமை – ஆண்மகவைப் பெற்றெடுத்த ரூத்து

ரூத்து ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தார். ஊர்ப் பெண்கள் நகோமியைப் பார்த்து, “ஆண்டவர் திருப்பெயர் போற்றி! போற்றி! உன்னைக் காக்கும் பொறுப்பினை உடையான் ஒருவனை அவர்தாம் அருளியுள்ளாரே;

மெரினா ராஜ் – வத்திக்கான்

போவாசு தாம் சொன்னபடியே ரூத்தைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவரை மணந்து கொண்டார். அவர்கள் கூடி வாழ்ந்த போது, அவர் கருத்தரிக்க ஆண்டவர் அருள்கூர்ந்தார். ரூத்து ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தார். ஊர்ப் பெண்கள் நகோமியைப் பார்த்து, “ஆண்டவர் திருப்பெயர் போற்றி! போற்றி! உன்னைக் காக்கும் பொறுப்பினை உடையான் ஒருவனை அவர்தாம் அருளியுள்ளாரே; இஸ்ரயேலில் அவனது பெயரும் புகழுடன் ஓங்கித் திகழுவதாக! புதுவாழ்வுனக்கு அன்னவன் தருவான் முதுமையில் உனக்கு அன்னமும் அளிப்பான் உன்பால் கொண்ட அன்பால், உனக்கு மைந்தர் எழுவரின் மேலாய் விளங்கும் மருமகள் அவனை ஈன்றவள் அன்றோ!” என்று வாழ்த்தினார்கள்.

நகோமி குழந்தையைக் கையில் எடுத்து மார்போடணைத்துக் கொண்டார். அவரே, அதைப் பேணி வளர்க்கும் தாயானார். சுற்றுப்புறப் பெண்கள், “நகோமிக்கு ஒரு மகன் பிறந்துள்ளான்” என்று சொல்லி, அவனுக்கு ‛ஓபேது’ என்று பெயரிட்டார்கள், அவனே தாவீதின் தந்தையான ஈசாயின் தந்தை. பெரேட்சின் வழித்தோன்றல்களின் அட்டவணை இதுவே; பெரேட்சுக்கு எட்சரோன் பிறந்தார். எட்சரோனுக்கு இராம் பிறந்தார்; இராமுக்கு அம்மினதாபு பிறந்தார்; அம்மினதாபுக்கு நகுசோன் பிறந்தார்; நகுசோனுக்குச் சல்மோன் பிறந்தார். சல்மோனுக்குப் போவாசு பிறந்தார்; போவாசுக்கு ஓபேது பிறந்தார். ஓபேதுக்கு ஈசாய் பிறந்தார். ஈசாய்க்குத் தாவீது பிறந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 June 2023, 13:34