தேடுதல்

மணிப்பூரில் இனக்கலவரத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மணிப்பூரில் இனக்கலவரத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்   (AFP or licensors)

மணிப்பூரில் அமைதி நிலவ கிறிஸ்தவ சபைகள் செபம்

மணிப்பூர் மாநிலத்தில் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து, பெரும் மனிதகுல நெருக்கடியை உருவாக்கும் ஆபத்து உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பெரும்பான்மை இந்துக்களுக்கும் பழங்குடியின கிறிஸ்தவர்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்றுவரும் மணிப்பூரில் அமைதி நிலவவேண்டும் என புது டெல்லியின் தூய இதய பேராலயம் முன்பு கிறிஸ்தவ சபைகளின் செபவழிபாடு ஒன்று இடம்பெற்றது.

71 பேரின் உயிரிழப்புக்கும், மதவழிபாட்டுத் தலங்கள் உட்பட 1700 வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளதற்கும் காரணமான இம்மோதல்களை முடிவுக்குக் கொணர்ந்து  மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும்  என அனைவரும் இணைந்து செபிப்பதாக அறிவித்தார் Guwahatiயின் முன்னாள் பேராயர் Thomas Menamparampil.

மணிப்பூர் மாநிலத்தில் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து, பெரும் மனிதகுல நெருக்கடியை உருவாக்கும் ஆபத்து உள்ளதாக கிறிஸ்தவ சபைகளை உள்ளடக்கிய அமைதி குழு தன் ஆழ்ந்த கவலையை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

மணிப்பூரின் 32 இலட்சம் மக்கள் தொகையில் Meiteis இந்துக்கள் 53 விழுக்காடாகவும், பழங்குடியின கிறிஸ்தவர்கள் 41.29 விழுக்காடாகவும் உள்ளனர்.

பெரும்பான்மையினராக வாழும் இந்துக்களுக்கும்  அனைத்துச் சலுகைகளையும் வழங்கும் நோக்கத்தில் அவர்களையும் தாழ்த்தப்பட்ட பழங்குடி இனமக்களாக அறிவிக்க அரசு எடுத்துவரும் முயற்சிகளை, பழங்குடி இனத்தவர் எதிர்த்துவருவதால் இந்த மோதல் மணிப்பூரில் வலுப்பெற்றுள்ளது.(UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 May 2023, 13:32