தேடுதல்

1948ல் இஸ்ராயேல் நாடு உருவாக்கப்பட்டபோது..... 1948ல் இஸ்ராயேல் நாடு உருவாக்கப்பட்டபோது.....  

தடம் தந்த தகைமை – இப்தா வழி விடுதலை

இப்தா கிலாயதின் பெரியோர்களிடம், “ஆண்டவர் அம்மோனியரை என்னிடம் ஒப்புவித்தால், நான் உறுதியாக உங்கள் தலைவனாக இருப்பேன்” என்றார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கிலாயத்தைச் சார்ந்த இப்தா வலிமைமிக்க போர்வீரர். அவர் ஒரு விலைமாதின் மகன்; இப்தா கிலாயாதுக்குப் பிறந்தவர். கிலாயாதின் மனைவியும் அவருக்குப் புதல்வரைப் பெற்றெடுத்தாள். அம்மனைவியின் புதல்வர் பெரியவர்களானதும் இப்தாவைத் துரத்திவிட்டனர். இப்தா தம் சகோதரர்களிடமிருந்து தப்பி ஓடி, தோபு நாட்டில் வாழ்ந்து வந்தார். அம்மோனியர் இஸ்ரயேலருடன் போர் தொடுத்த பொழுது, கிலாயதின் பெரியோர்கள் இப்தாவைத் தோபிலிருந்து கூட்டி வரச் சென்றனர். அவர்கள் இப்தாவிடம், “நீர் வந்து எங்களுக்குத் தலைவராக இரும். அம்மோனியருக்கு எதிராக நாம் போரிடுவோம்” என்றனர். இப்தா கிலாயதின் பெரியோர்களிடம், “நீங்கள் என்னை வெறுக்கவில்லையா?, என் தந்தையின் வீட்டிலிருந்து என்னை வெளியே துரத்தவில்லையா? நீங்கள் துன்புறும் இந்நேரத்தில் மட்டும் ஏன் என்னிடம் வருகின்றீர்கள்” என்று கேட்டார். கிலாயதின் பெரியோர்கள் இப்தாவிடம், “அதனால்தான் நாங்கள் உம்மை அழைத்துச் செல்ல வந்துள்ளோம். எங்களுடன் வந்து அம்மோனியருடன் போரிடும். நீர் எங்களுக்கும் கிலாயதில் வாழும் அனைவருக்கும் தலைவராக இருப்பீர்” என்றனர். இப்தா கிலாயதின் பெரியோர்களிடம், “நீங்கள் அம்மோனியருடன் போரிடுவதற்காக என்னை அழைத்துச் செல்ல வந்திருக்கின்றீர்கள். ஆண்டவர் அவர்களை என்னிடம் ஒப்புவித்தால், நான் உறுதியாக உங்கள் தலைவனாக இருப்பேன்” என்றார். கிலயாதின் பெரியோர்கள் இப்தாவிடம், “நீர் கூறியபடி நாங்கள் செய்வது உறுதி. ஆண்டவரே நமக்கிடையே சாட்சியாக இருப்பார்” என்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2023, 08:59