தேடுதல்

இந்தோனேசிய குழந்தைகள் இந்தோனேசிய குழந்தைகள்  

குழந்தைகள் ஊட்டச்சத்தில் கவனம் செலுத்துவோம் :பேராயர் Petrus Turan

மனிதர்கள் உயிர்வாழும் சூழலை உருவாக்குவதற்கும் அதனைப் பராமரிப்பதற்கும் உதவுவதில் நம் அனைவருக்கும் பொறுப்பு உண்டு : பேராயர் Petrus Turang

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

குழந்தை வளர்ச்சிக்கு எதிரான முட்டுக்கட்டையை முறியடிப்பதில் நாம் ஒன்றிணைந்து போராடவேண்டும் என்று அழைப்புவிடுத்துள்ளார் குபாங்கின் பேராயர் Petrus Turang

ஏப்ரல் 9, இஞ்ஞாயிறன்று, Kupang-கில் தலைமையேற்று நடத்திய உயிர்ப்புப் பெருவிழாத் திருப்பலியில் இவ்வாறு கேட்டுக்கொண்ட பேராயர் Turang அவர்கள், இந்தத் தடையைத் தகர்த்தெறிவதில் நம் அனைவரின் பங்கும் நமது வாழ்வில் சுற்றுச்சூழல் நீதியை உணர்ந்து கொள்வதற்கான உண்மையான ஒரு வழியாகவும் அமைகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த மாநிலத்தில் ஒரு தீவிரமான பிரச்சனையாகத் தொடரும் இதனை முறியடிப்பதில் இங்குள்ள கத்தோலிக்கர்கள் அனைவரும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்ட பேராயர் Turang அவர்கள், தேவைப்படும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்குச் சரியான ஊட்டச்சத்தை வழங்கவும், இப்பிரச்சனையைத் தீர்க்கும் அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் நம்பிக்கையாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இயேசு கிறிஸ்துவின் தியாகம் மற்றும் அவரது உயிர்த்தெழுதலை நினைவுகூரும் இப்பெருவிழா, பொது வாழ்வில் கத்தோலிக்கர்கள் தங்கள் பங்களிப்பை அதிகரிக்க ஒரு தூண்டுதலாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட பேராயர் Turang அவர்கள், மனிதர்கள் உயிர்வாழும் சூழலை உருவாக்குவதற்கும் அதனைப் பராமரிப்பதற்கும் உதவுவதில் நம் அனைவருக்கும் பொறுப்பு உண்டு என்றும் எடுத்துரைத்தார்.

கிழக்கு நுசா தெங்கரா மாநிலத்தில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 3 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து வளர்ச்சி குன்றியுள்ளனர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 April 2023, 14:21