10 கிறிஸ்தவர்களை விடுதலைச் செய்துள்ள சட்டீஸ்கர் நீதிமன்றம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
வலதுசாரி தேசியவாதிகளால் தூண்டப்பட்டு இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கும் இயற்கையை வழிபடுபவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் கைதுச் செய்யப்பட்ட 10 கிறிஸ்தவர்களை பிணைய விடுதலைச் செய்துள்ளது சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம்.
பிரிந்தசபை கிறிஸ்தவர்களின் இந்த பிணைய விடுதலைக் குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்ட அம்மாநில கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Victor Thakur அவர்கள், இந்த அப்பாவி கிறிஸ்தவர்களின் குற்றமற்றத்தன்மையை வெளிப்படுத்திய நீதிமன்றத்தின் மனவுறுதியை பராட்டுவதாகவும், வலதுசாரி அமைப்புக்களால் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சமூக மற்றும் பொருளாதர அளவில் ஒதுக்கப்பட்டுவரும் நிலையில் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு உறுதி நிரம்பியது என கூறினார்.
சட்டீஸ்கரின் Narayanpur மாவட்டத்தில், பிரிந்த கிறிஸ்தவ சபையினருக்கும், மூதாதையரின் ஆவியை வழிபடும் பாரம்பரிய மத நம்பிக்கையாளர்களுக்கும் இடையே வலதுசாரி தேசியவாதிகளால் தூண்டப்பட்டு நடந்த மோதலில் 10 கிறிஸ்தவர்கள் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் கைதுச் செய்யப்பட்டு தற்போது பிணையத்தில் விடுதலை வழங்கப்பட்டுள்ளனர். (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்