இந்தியாவில், ஒரே பாலினத்தவர் திருமணத்திற்கு எதிர்ப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்தியாவில் பல்வேறு மதத்தைச் சேர்ந்த தலைவர்கள், ஒரே பாலினத்தவர் திருமணங்களை உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கக் கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பல்வேறு மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள் இந்தியாவில் ஒரே பாலினத்தவர் திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், இது போன்ற நடவடிக்கையை ‘மனித சமுதாயத்தை மேலும் துயருக்குள்ளாக்கும் நிகழ்வு’ என்றும் வர்ணித்துள்ளார்
இது ஒரு பொது விவாதமாக உருவெடுத்துள்ள வேளை, இதுகுறித்து 2013-ஆம் ஆண்டு மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் பேசினார் என்றும், இருப்பினும், சில வழக்கறிஞர் குழுக்கள் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து அண்மையில் இது மீண்டும் செய்திகளில் வந்துள்ளது என்றும், வரும் ஏப்ரல் 18-ஆம் தேதியன்று, இந்திய உச்ச நீதிமன்றத்தால் இது விசாரிக்கப்பட உள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 2013- ஆம் ஆண்டு கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் அவர்கள், இது குறித்துக் கருத்துத் தெரிவித்தபோது, திருஅவை எப்போதும் "ஒரே பாலினத்தவர் சேர்க்கையை சட்டப்பூர்வமாக்குவதை எதிர்த்தாலும், அவர்களைக் குற்றமற்றவர்களாக மாற்றுவதை ஒருபோதும் எதிர்க்கவில்லை, ஏனென்றால் அவர்களை நாங்கள் குற்றவாளிகளாகக் கருதவில்லை என்றும் கூறியிருந்தார்.
உண்மையில், திருஅவை, ஒரே பாலினத்தவர் அனைவரும் ஒரே மாதிரியான மனிதமாண்பைக் கொண்டுள்ளனர் மற்றும் அனைத்து வகையான அநீதியான பாகுபாடு, துன்புறுத்தல் அல்லது முறைகேடுகள் ஆகியவற்றைக் கண்டனம் செய்வதை ஆதரிக்கிறது என்றும் தெரிவித்திருந்தார் கர்தினால் கிராசியாஸ். (ASIAN
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்