தேடுதல்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பாகிஸ்தான் சிறுமி தன் தாயுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பாகிஸ்தான் சிறுமி தன் தாயுடன்   (AFP or licensors)

பாகிஸ்தானில் ஒரு கோடி சிறாருக்கு உடனடி உதவிகள் தேவை

உணவின்மை, போதிய தங்குமிடமின்மை போன்றவைகளுடன் கடுமையான குளிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் பாகிஸ்தான் சிறார்கள் பேராபத்தில் உள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பாகிஸ்தான் நாட்டில் 40 இலட்சம் குழந்தைகள், மிகவும் அசுத்தமான தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் வாழ்ந்துவருவதாக யுனிசெப் வெளியிட்ட அறிக்கை உரைக்கின்றது.

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கால் தேசிய அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டு 4 மாதங்கள் கடந்தபின்னரும் இன்னும் ஒரு கோடி ஆண் பெண் சிறாருக்கு உடனடி உதவிகளும், வாழ்வைப் பாதுகாக்கும் உதவிகளும் தேவைப்படுவதாக யுனிசெப்பின் அறிக்கை கூறுகிறது.

மழை நின்றுள்ளபோதிலும் பாகிஸ்தான் சிறார்களை சூழ்ந்துள்ள துயர்நிலைகள் அகலவில்லை என உரைக்கும் பாகிஸ்தான் நாட்டிற்கான யுனிசெப் பிரதிநிதி Abdullah Fadil அவர்கள், போதிய உணவின்மை, போதிய தங்குமிடமின்மை போன்றவைகளுடன் கடுமையான குளிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் பாகிஸ்தான் சிறார்கள் பேராபத்தில் உள்ளனர் என்றும் கூறினார்.

சத்துணவுப் பற்றாக்குறை குறித்து எட்டு இலட்சம் பாகிஸ்தான் சிறார்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 60 ஆயிரம் பேர் போதிய சத்துணவின்றி வாடுவதாகத் தெரியவந்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 January 2023, 15:13