தேடுதல்

மனித எலும்புகள் மனித எலும்புகள்  

தடம் தந்த தகைமை : உயிர்பெற்ற உலர்ந்த எலும்புகள்!

நமது பாவ‌ வ‌ழிக‌ளை விட்டு வில‌கி இறைவ‌னிட‌ம் திரும்ப‌ வேண்டும் என்ப‌தையே எசேக்கியேலின் வாழ்க்கையும், வார்த்தைக‌ளும் போதிக்கின்ற‌ன‌.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

“ஆண்டவர் எசேக்கியேலைத் தூக்கிக் கொண்டு போய்ப் பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார். அங்கே பள்ளத்தாக்கின் அடியில் மிகப் பல எலும்புகள் கிடந்தன. ”மானிடா! இந்த எலும்புகள் உயிர்பெறமுடியுமா? “ என்று ஆண்டவர் கேட்க, “ஆண்டவரே! உமக்குத் தெரியுமே” என்றார் எசேக்கியேல். “நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரை என்றார் ஆண்டவர். "உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். அப்போது நானே ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள்.” கடவுள் சொல்ல, எசேக்கியேல் அப்படியே செய்தார். அப்போது எலும்புகள் உராயும் ஓசை கேட்டது. ஒவ்வொரு எலும்பும் தனக்குரிய எலும்புகளுடன் சேர்ந்து கொண்டது. அவற்றில் நரம்புகள் ஏற்பட்டு, சதை தோன்றித் தோல் அவற்றின்மேல் மூடியது. எசேக்கியேல் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

“உயிர்மூச்சுக்கு இறைவாக்குரை. நான்கு காற்றுகளிலிருந்தும் உயிர்மூச்சே வா, நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள் புகு. அப்பொழுது இவர்கள் உயிர் பெறுவர். எனச் சொல்” என ஆண்டவர் சொன்னார். எசேக்கியேல் அப்படியே செய்தார். அப்போது அந்த எலும்புக் கூடுகளின் கூட்டம் மாபெரும் படைத்திரள் போல உயிர் பெற்று, காலூன்றி நின்றன. "மானிடா, இந்தக் காட்சி இஸ்ரயேல் மக்களைக் குறிக்கும். அவர்கள் எலும்புகளாகிப் போனார்கள். நாங்கள் உலர்ந்து விட்டோம், நம்பிக்கை இழந்தோம்” என்கின்றனர். “ஆனால், கல்லறைகளில் இருந்தும் வாழ்வைக் கொடுக்கவும், இழந்த அவர்கள் நாட்டைத் திரும்பப் பெறச் செய்யவும் என்னால் இயலும்” என்றார் கடவுள். “தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் வார்த்தைகளுள் எதுவும் இனிமேல் காலந்தாழ்த்தாது. நான் உரைக்கும் வாக்கு நிறைவேறியே தீரும்” இன்றையச் சூழலில், நமது பாவ‌ வ‌ழிக‌ளை விட்டு வில‌கி இறைவ‌னிட‌ம் திரும்ப‌ வேண்டும் என்ப‌தையே எசேக்கியேலின் வாழ்க்கையும், வார்த்தைக‌ளும் நமக்குப் படிப்பிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 January 2023, 13:14