தேடுதல்

சான் எஜிதியோ மற்றும் Mama Shamsa அமைப்பு தலைவர்களுடன் திருத்தந்தை சான் எஜிதியோ மற்றும் Mama Shamsa அமைப்பு தலைவர்களுடன் திருத்தந்தை   (Vatican Media)

மனித உடன்பிறந்த உணர்வு நிலைக்கான Zayed விருது பெறுபவர்கள்

கென்யாவின் Mama Shamsa என்ற அமைப்பு, கென்ய இளையோரை வன்முறை, குற்றம், தீவிரவாதம் போன்றவைகளிலிருந்து விலகி நிற்க உதவி வருகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

2023ஆம் ஆண்டின் மனித உடன்பிறந்த உணர்வு நிலைக்கான Zayed விருது உரோம் நகரின் சான் எஜிதியோ குழுவுக்கும், கென்யா நாட்டின் அமைதி அமைப்பு Mama Shamsaவுக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உடன்பிறந்த நிலைக்கான அனைத்துலக நாள் பிப்ரவரி 4ஆம் தேதி சிறப்பிக்கப்படும்போது அமைதிக்காக அயராது உழைத்துவரும் இவ்விரு அமைப்புக்களுக்கும் இவ்விருது வழங்கப்படும்.

மனித உடன் பிறந்த உணர்வை ஊக்குவித்து வருவதற்காகவும், மக்களின் அமைதியில் ஒன்றிணைந்த வாழ்வை மேம்படுத்தி வருவதற்காகவும், சான் எஜிதியோ மற்றும் Mama Shamsa அமைப்புகளுக்கு இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உரோம் நகரிலிருந்து செயல்படும் சான் எஜிதியோ கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு, 72 நாடுகளில் தன் அலுவலகங்களைக் கொண்டு, கலந்துரையாடல்களை ஊக்குவித்து நாடுகளுக்குள்ளேயே அமைதியை உருவாக்க உழைத்து வருகிறது.

Zayed விருது அறிவிக்கப்பட்ட நிகழ்வின் போது திருத்தந்தை
Zayed விருது அறிவிக்கப்பட்ட நிகழ்வின் போது திருத்தந்தை

கென்யாவில் அமைதியை உருவாக்குவதில் உழைத்துவரும் Shamsa Abubakar Fadhil அவர்களின் Mama Shamsa என்ற அமைப்பு, கென்ய இளையோரை வன்முறை, குற்றம், தீவிரவாதம் போன்றவைகளிலிருந்து விலகி நிற்க உதவி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஸ்லாம் மத தலைமைக்குரு Ahmed Al-Tayeb அவர்களும் சந்தித்து உடன்பிறந்த நிலை குறித்த ஏட்டில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு Zayed விருது உருவாக்கப்பட்டது.

மனிதாபிமான உதவிகளுக்கு பெயர்போன, ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனர் Sheikh Zayed bin Sultan Al Nahyan அவர்களின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள இவ்விருது, 10 இலட்சம் அமெரிக்க டாலர்களை உள்ளடக்கியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 January 2023, 13:15