தேடுதல்

சென்னையில் கிறிஸ்மஸ் சென்னையில் கிறிஸ்மஸ்  

வாரம் ஓர் அலசல்: நன்றியுடன் 2022, நம்பிக்கையுடன் 2023

2022க்கு நன்றியுடன் விடையளித்து, புலரவிருக்கும் புதிய 2023ஐ ஆண்டவரில் நம்பிக்கை வைத்து வரவேற்போம்.

மேரி தெரேசா: வத்திக்கான்

கிறிஸ்மஸ் பெருவிழா மகிழ்வில் திளைத்திருக்கின்ற நாம் எல்லாரும் 2022ஆம் ஆண்டை அலசிக்கொண்டிருக்கிறோம். அவ்வாறு அலசுகையில் மனதில் மகிழ்வும் அதேநேரம் சோகமும் இழையோடுகின்றன. எனினும், புனித பவுலடிகளார் அழைப்புவிடுப்பதுபோல, நடந்தவை அனைத்துக்கும் நன்றி சொல்லவும் மனது விரும்புகிறது. 2022க்கு நன்றியுடன் விடையளித்து, புலரவிருக்கும் புதிய 2023ஐ ஆண்டவரில் நம்பிக்கை வைத்து வரவேற்போம். இவ்வாறு சிந்திக்க இன்றைய வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சி வழியாக நம்மை அழைக்கிறார், அருள்முனைவர் M.R.ஜேசு அவர்கள். திருஅவைச் சட்ட வல்லுனராகிய இவர், சிவகங்கை மறைமாவட்டத்தைச் சார்ந்தவர்.  இவர், சிவகங்கை மறைமாவட்டம், இராம்நகர் பங்குத்தளத்தின் பொறுப்பாளர் ஆவார்.

நன்றியுடன் 2022, நம்பிக்கையுடன் 2023 – அருள்முனைவர் M.R.ஜேசு

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 December 2022, 14:34