தேடுதல்

ஈராக்கில் கிறிஸ்மஸ் ஈராக்கில் கிறிஸ்மஸ் 

ஈராக் கர்தினால் சாக்கோவின் கிறிஸ்மஸ் செய்தி

கிறிஸ்து பிறப்பு என்பது நம்முடனான கிறிஸ்துவின் தொடர் இருத்தலையும், அவரது நீடித்த அன்பையும் பரிவிரகத்தையும் வெளிப்படுத்துவதாகும் : கர்தினால் சாக்கோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிறிஸ்து பிறப்பு, ஈராக் முதல் உக்ரைன் வரை உலக மக்கள் மேற்கொண்டு வரும் துன்ப துயரங்கள்மீது மிகுந்த அக்கறை செலுத்துகிறது என்று ஈராக்கின் கல்தேய கத்தோலிக்க வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் இரஃபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.

அரபு நாட்டிலும், உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் நாடுகளின் அருள்பணியாளர்கள் மற்றும் நம்பிக்கையாளர்களுக்குத் தான் வழங்கியுள்ள நள்ளிரவு திருப்பலி மறையுரைக்கான முன்னுரையில் இவ்வாறு கூறியுள்ளார் கர்தினால் சாக்கோ.  

உக்ரைனுக்கும் இரஷ்யாவிற்கும் இடையிலான கொடிய போர் மற்றும் ஈராக், சிரியா, லெபனான், பாலஸ்தீனம் மற்றும் ஏமன் உட்பட உலகின் பல பகுதிகளில் நிலவும் பிரிவுகள், மோதல்கள் மற்றும் அநீதிகள் போன்றவற்றால் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடிகளால் உலகம் பாதிக்கப்பட்டு வரும் இந்நேரத்தில், கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வருகிறது என்று கூறியுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், தொடர்ந்து சிறுபான்மையினர் அதிகளவில் ஒடுக்கப்பட்டு வருவதையும் அவர்களின் துயரங்களையும் தனது மறையுரையில் எடுத்துக்காட்டியுள்ளார்.

கிறிஸ்துமஸ் என்பது இரண்டாயிரம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது அல்லது அலங்காரங்கள், பரிசுப் பொருள்கள், சந்திப்புகள் போன்ற வெளிப்புற அடையாளங்களைக் கொண்ட ஒரு நிகழ்வு மட்டுமல்ல,  மாறாக, அது நமக்குப் பகுத்தறிவு மற்றும் நம்பிக்கையின் வழியாக நம்மிடையே கடவுளின் தொடர் இருத்தல் பற்றியும், அவருடைய நீடித்த அன்பு மற்றும் பரிவிரக்கத்தைப் பற்றியும் கற்பிக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் கர்தினால் சாக்கோ (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 December 2022, 15:12