தேடுதல்

பேரருள்திரு Fernando Ocáriz அவர்கள் திருத்தந்தையை சந்தித்த போது . பேரருள்திரு Fernando Ocáriz அவர்கள் திருத்தந்தையை சந்தித்த போது .  

OPUS DEI ன் சிறப்பு பொதுப்பேரவை - 2023

OPUS DEI என்னும் அமைப்பை உருவாக்கிய புனித ஹோசே மரியா புனிதராக்கப்பட்ட 20 ஆம் ஆண்டை நினைவுகூரும் வேளையில், அவரது ஆசீருடன் 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சிறப்புப் பேரவையானது நடைபெறும்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருத்தூதுப் பணிக்கு புதிய ஆற்றலை தரும், திருத்தந்தை தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் MOTU PROPRIO அறிக்கைக்கேற்ப, நாம் விரும்பும் மாற்றங்களை அல்ல, ஒவ்வொருவருக்கும் நன்மை தரக்கூடிய மாற்றங்களை உருவாக்க, 2023ஆம் ஆண்டு சிறப்பு பொதுப் பேரவை நடைபெறும் என தெரிவித்துள்ளார், பேரருள்திரு Fernando Ocáriz.

 “Ad charisma tuendum” அதாவது "தனிவரத்தைப் பாதுகாப்பதற்கு" என்ற தலைப்பில், Motu Proprio அறிக்கை வழியாக திருத்தந்தை வெளியிட்டுள்ள மாற்றங்களை வலியுறுத்தும் அடிப்படையில் Opus Dei என்ற உலகளாவிய கத்தோலிக்க பக்த அமைப்பின் சிறப்பு பொதுப்பேரவை 2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் நடைபெறும் என பேரருள்திரு Fernando Ocáriz அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருத்தந்தை வலியுறுத்தும் Motu Proprio கருத்துக்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து பொதுக்குழு, மற்றும் மத்திய ஆலோசகர்கள் குழுவோடு இணைந்து பணியாற்றி வருவதாகவும், அருள்பணியாளர்கள் பற்றிய ஆண்டறிக்கை,  மற்றும் அவர்கள்  சார்ந்த செயல்மாற்றங்கள் என நாம் விரும்பும் மாற்றங்களை மட்டுமல்லாது ஒவ்வொருவருக்கும் நன்மைதரக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் OPUS DEI ன் இப்பேரவை அமையும் எனவும் தெரிவித்துள்ளார் Ocáriz.

OPUS DEI என்னும் அமைப்பை உருவாக்கிய புனித ஹோசே மரியா, புனிதராக்கப்பட்ட இருபதாம் ஆண்டை நினைவுகூரும் வேளையில், இப்பேரவைக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும், திருஅவைக்கு நல்ல பலன் தந்து, ஒவ்வொருவரின் வாழ்வையும் வலுப்படுத்த அருள்வேண்டி இப்பணியை அப்புனிதருக்கு அர்ப்பணித்து செயல்படுவதாகவும் கூறியுள்ளார் பேரருள்திரு Fernando Ocáriz.   

மேலும், பெரும்பாலும் பொது நிலையினரை அதிகமாகக்கொண்ட இவ்வமைப்பின் பேரவைக்கு தங்களது ஆலோசனைகளைக் கூற விரும்புபவர்களுக்கு  கூடிய விரைவில் அதற்கான செயல்திட்ட வழிமுறைகள் அறிவிக்கப்படும் எனவும், கேட்கும் கேள்விகள், கொடுக்கும் ஆலோசனைகள் அனைத்தும் திருப்பீடம் வலியுறுத்தும் அடிப்படையிலும், அவ்வமைப்பின் சட்டதிட்டங்கள் வழி அனைவருக்கும் நன்மைதரும் வகையிலும் அமைக்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் பேரருள்திரு Fernando Ocáriz .  

புனித ஹோசெ மரியா 2002ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 October 2022, 14:14