தேடுதல்

பங்களாதேஷில் நடைபெற்ற உண்ணாநோன்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பங்களாதேஷில் நடைபெற்ற உண்ணாநோன்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  

உரிமைப்பாதுகாப்பு வேண்டும் - பங்களாதேஷ் சிறுபான்மையினர்

பங்களாதேஷ் சிறுபான்மையினர் அதிகமான அடக்குமுறையை அனுபவித்து வருகின்றனர், சிறுபான்மையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார் Monindra.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பங்களாதேஷின் தற்போதைய அரசியல் தலைவரான Sheikh Hasina என்பவர் தலைமையிலான அரசு சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது எனவும், தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவும் HBCUC என்னும் இந்து, புத்த, கிறிஸ்தவ ஒன்றிப்புப் பேரவையின் இணைச் செயலர்  Monindra Kumar Nath தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 22 சனிக்கிழமை பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில்,  HBCUC என்னும் இந்து, புத்த, கிறிஸ்தவ ஒன்றிப்புப் பேரவை சார்பில் நடைபெற்ற ஒருநாள் உண்ணாநோன்புப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது இவ்வாறுக் கூறியுள்ளார் அப்பேரவையின் இணைச்செயலர்  Monindra Kumar Nath.

 2018 ஆம் ஆண்டுத் தேர்தலில் அவாமி லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற Sheikh Hasina என்பவரின் தலைமையில் நடந்து கொண்டிருக்கும் தற்போதைய ஆட்சி, பிரிவினைகளை வளர்த்து வருகின்றது எனவும், சிறுபான்மையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார் Monindra.

தேர்தல் முடிந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அரசாங்கம் அதன் வாக்குறுதிகள் எதையும் செயல்படுத்தவில்லை எனவும், மாறாக சிறுபான்மையினர் அதிகமான அடக்குமுறையை அனுபவித்து வருகின்றனர் எனவும் Monindra குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையினர் பாதுகாப்பு, சிறுபான்மையினர் தேசிய ஆணையம், சமத்துவமின்மை ஒழிப்பு, பழங்குடியினருக்கான ஆணையம், Chittagong மலைப்பாதை, அமைதி ஒப்பந்தம் என்பன போன்ற பல தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை எனவும் Monindra  தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினரின் ஆலயங்கள், 180 வீடுகள் மற்றும் 50 வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டு, இந்து சிறுபான்மையினர் 3பேர் மரணமடைந்தும் 300 பேர் காயமுற்றும் மேலும்  இழிவுபடுத்தப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளார் Monindra

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2022, 12:36