தேடுதல்

நைஜீரியாவில் கத்தோலிக்க அருள்பணியாளர்கள் கடத்தல் நைஜீரியாவில் கத்தோலிக்க அருள்பணியாளர்கள் கடத்தல் 

நைஜீரியாவில் மேலும் இரண்டு அருள்பணியாளர்கள் கடத்தல்!

நைஜீரியாவில் இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 900 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் : நைஜீரிய நாளிதழ்

செல்வராஜ் சூசைமாணிக்ககம் - வத்திக்கான்

ஜூலை 2, கடந்த சனிக்கிழமையன்று, நைஜீரியாவில் மேலும் இரண்டு கத்தோலிக்க அருள்பணியாளர்கள் கடத்தப்பட்டு, அடையாளம் தெரியாத இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக Edo மாநிலக் காவல் துறை தெரிவித்துள்ளது.

உரோமியிலுள்ள புனித Patrick பங்கின் அருள்பணியாளர் Peter Udo, உபோகாவிலுள்ள புனித வளனார் தியான இல்லத்தின் அருள்பணியாளர் Philemon Oboh ஆகிய இருவரும் Benin நகரிலிருந்து திரும்புகையில், அவர்கள் பயணித்த வாகனம் இடையில் வழிமறிக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளதாக Edo மாநிலக் காவல் துறை தெரிவித்துள்ளது.

ஜூன் 25, சனிக்கிழமையன்று, கடுனாவில் அருள்பணியாளர் Vitus Borogo மற்றும், ஜூன் 26, ஞாயிற்றுக்கிழமையன்று அருள்பணியாளர் Christopher Odia Ogedegbe ஆகிய இருவரும் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ள நிலையில் இக்கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. மேலும், ஜனவரி முதல் மார்ச் வரை 900 கிறிஸ்தவர்கள் இந்நாட்டில் கொல்லப்பட்டுள்ளனர் என்று நைஜீரிய நாளிதழ் ஒன்று கூறியுள்ளது.

2009-ஆம் ஆண்டு முதல், அந்நாட்டை இஸ்லாமிய நாடாக மாற்றும் நோக்கில், ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய இஸ்லாமியக் குழுக்களில் ஒன்றான Boko Haramன் கிளர்ச்சி துவங்கியதிலிருந்து, நைஜீரியா நாடு முழுமையான பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2022, 14:25