தேடுதல்

சீனாவில் கிறிஸ்தவர்கள் சீனாவில் கிறிஸ்தவர்கள் 

சீன கிறிஸ்தவர்களுக்காக உலக அளவில் ஒரு வார இறைவேண்டல்

சீனாவுக்காக இறைவேண்டல் செய்யும் உலகளாவிய அமைப்பு, இணையதளம் வழியாக ஒரு வார இறைவேண்டல் நிகழ்வை நடத்தி வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

சீனக் கிறிஸ்தவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இறைவேண்டல் வாரத்தில், உலகினர் அனைவரும் அவர்களுக்காகச் செபிக்குமாறு, சீனாவுக்காக இறைவேண்டல் செய்யும் உலகளாவிய அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவரான மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், 2021ம் ஆண்டில் அழைப்புவிடுத்ததன்பேரில், சீனாவுக்காக இறைவேண்டல் செய்யும் உலகளாவிய அமைப்பு, சீனாவுக்காக ஒரு வார இறைவேண்டல் நடவடிக்கையைத் தொடங்கி, அதனை ஒவ்வோர் ஆண்டும் மே 22ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு கடைப்பிடித்து வருகிறது.

சீனாவுக்காக இறைவேண்டல் செய்யும் உலகளாவிய அமைப்பு, இவ்வாரத்தில் இணையதளம் வழியாக இறைவேண்டல் நிகழ்வை நடத்தி வருகிறது. அதில் உலகினர் பங்குபெறுமாறும் அவ்வமைப்பு ஊக்கப்படுத்தியுள்ளது.

மேலும், ஹாங்காங்கின் 90 வயது நிரம்பிய கர்தினால் ஜோசப் சென் அவர்கள் கைதானதையடுத்து, சீனாவிலுள்ள திருஅவை மற்றும், மக்களுக்காக உருக்கமாகச் செபிக்குமாறு, கர்தினால் போ அவர்கள் உலகினரைக் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 May 2022, 18:25