தேடுதல்

இரஷ்ய ஆர்தடாக்ஸ் வழிபாடு இரஷ்ய ஆர்தடாக்ஸ் வழிபாடு  

உக்ரைனின் அமைதிக்கான எந்த அழைப்பையும் நிராகரிக்கக்கூடாது

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய அனைவருக்கும் வலுவான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ள இரஷ்ய குழு

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இரஷ்ய ஆர்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை 233 அருள்தந்தையர்கள் மற்றும் திருத்தொண்டர்கள் கொண்ட குழு ஒன்று உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய அனைவருக்கும் வலுவான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.  

இவ்வேண்டுகோளில், இரஷ்ய மற்றும் உக்ரேனிய வீரர்கள் அனைவரும் மக்களுக்கு காயங்கள் ஏற்படுத்தாமல் வீடு திரும்ப முடியும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளனர் இக்குழுவினர்,

தற்போதைய போர் நிலைமையை "சகோதர படுகொலை" என்று விவரித்துள்ளதுடன்  நல்லிணக்கத்திற்கும் உடனடி போர்நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ள இக்குழுவினர், உக்ரைனிலுள்ள சகோதரர் சகோதரிகள் தேவையின்றி துன்பப்படுவதைக் குறித்து தாங்கள் மிகவும் வருந்துவதாகவும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இறுதித் தீர்ப்பை எடுத்துகாட்டிப் பேசியுள்ள இக்குழுவினர், உலகின் மீட்பிற்காக சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம், திருநற்கருணையின் வடிவில், மரணக் கட்டளைகளை வழங்குபவர்களுக்கு வாழ்வையல்ல மாறாக, முடிவில்லா தண்டனையை வழங்கும் என்றும் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

மேலும் போரில் ஈடுபட்டுள்ள  இரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்கள் அனைவரும் மக்களுக்கு எவ்விதப் பாதிப்பையும் உயிர்ச் சேதத்தையும் ஏற்படுத்தாமல் தங்கள் வீடுகளுக்கும் குடும்பங்களுக்கும் திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள இக்குழுவினர், இரஷ்யாவிலும் உக்ரைனிலும் வாழும் தங்கள் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் மீண்டும் நண்பர்களாக இருக்க, ஒருவரையொருவர் மதிக்க மற்றும் நேசிக்கத் தொடங்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 March 2022, 14:23