தேடுதல்

ஆயர் Telesphore Bilung ஆயர் Telesphore Bilung  

இராஞ்சி துணை ஆயர், Jamshedpurன் புதிய ஆயர்

2019ம் ஆண்டிலிருந்து Jamshedpurன் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக இருந்த, இறைவார்த்தை சபையைச் சேர்ந்த ஆயர் Telesphore Bilung அவர்கள், தற்போது அம்மறைமாவட்ட ஆயர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் Jamshedpur மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, இராஞ்சி மறைமாவட்ட துணை ஆயர் Telesphore Bilung அவர்களை இத்திங்களன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இராஞ்சியின் துணை ஆயராகவும், 2019ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து Jamshedpurன் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும் பணியாற்றிவந்த, இறைவார்த்தை சபையைச் சேர்ந்த ஆயர் Telesphore Bilung அவர்கள், 1961ம் ஆண்டு ஒடிசாவின் ரூர்கேலா  மறைமாவட்டத்தில் பிறந்து, 1992ம் ஆண்டு, இறைவார்த்தை துறவுசபையின் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

சம்பல்பூர் இளங்குருமட அதிபராகவும், இறைவார்த்தை துறவுசபையின் மாநிலத்தலைவராகவும் பணியாற்றியுள்ள ஆயர் Bilung அவர்கள், 2014ம் ஆண்டு ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு, 2019ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி முதல் Jamshedpurன் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக செயலாற்றியுள்ளார்.

1997ம் ஆண்டு முதல் Jamshedpurன் ஆயராக இருந்த இயேசுசபை ஆயர் Felix Toppo அவர்கள், 2018ம் ஆண்டு இராஞ்சி பேராயராக நியமிக்கப்பட்டதிலிருந்து, தற்போது, Jamshedpur மறைமாவட்டத்தின் ஆயராக இராஞ்சி துணை ஆயர் Bilung நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2021, 15:06